இந்தியா

"நானும் ரசித்தேன்...": மம்தா பானர்ஜியை சாடிய பிரதமர் மோடி 

செய்திப்பிரிவு

கொல்கத்தா: நடனமாடுவதை பார்த்து நானும் ரசித்தேன் என்று பிரதமர் மோடி சமூக வலைதளங்களில் பதிவிட்டுள்ளார்.

பிரதமர் மோடி டான்ஸ் ஆடுவது போல வீடியோ மீம் ஒன்று கடந்த சில நாட்களாக பரவிவந்தது. இதனை தனது சமூக வலைதள பக்கத்தில் பகிர்ந்துள்ள பிரதமர் மோடி, "உங்கள் அனைவரையும் போலவே நானும் நடனமாடுவதைப் பார்த்து மகிழ்ந்தேன். உச்சக்கட்ட வாக்கெடுப்பு சீசனில் இத்தகைய கிரியேட்டிவ் உண்மையிலேயே மகிழ்ச்சி அளிக்கிறது!" என்று கூறி, சிரிப்பு எமோஜிகளை பதிவிட்டுள்ளார்.

மேற்குவங்க முதல்வர் மம்தா பானர்ஜியும் டான்ஸ் ஆடுவது போல் வீடியோ மீம் ஒன்று வைரலாக பரவியது. இதனை எக்ஸ் தளத்தில் பதிவிட்ட பயனருக்கு எதிராக கொல்கத்தா காவல்துறை நடவடிக்கை எடுத்த சில மணிநேரங்களில் பிரதமர் மோடி இதேபோன்ற வீடியோவை காமெடியாக சமூக வலைதள பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.

கொல்கத்தா போலீஸார் மற்றும் மம்தா பானர்ஜியை சாடும் விதமாக பிரதமர் மோடி இதேபோன்ற வீடியோவை காமெடியாக சமூக வலைதள பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.

SCROLL FOR NEXT