மருத்துவர் பணியிடங்கள் காலி யாக உள்ளது குறித்து நான்கு வாரங்களுக்குள் பதிலளிக்கும்படி மத்திய அரசுக்கு மனித உரிமை ஆணையம் நோட்டீஸ் அனுப்பி உள்ளது.
டெல்லியில் உள்ள முக்கிய மருத்துவமனைகளில் மருத்துவர், செவிலியர் பணியிடங் கள் காலியாக இருப்பது குறித்து பத்திரிகைகளில் செய்திகள் வெளியாகின. இதை தேசிய மனித உரிமை ஆணையம் தாமாக முன்வந்து விசாரணைக்கு எடுத்துக் கொண்டுள்ளது.
இதுதொடர்பாக மத்திய சுகாதாரத் துறை செயலருக்கு ஆணையம் அனுப்பியுள்ள நோட்டீஸில் கூறியிருப்பதாவது:
மருத்துவர்கள், மருத்துவ சிறப்பு நிபுணர்கள் இல்லாமல் கடும் பற்றாக்குறை நிலவுகிறது என்று மத்திய அரசே ஒப்புக் கொண்டுள்ளதாக செய்திகள் வெளிவந்துள்ளன. மருத்துவர் பணியிடங்கள் 223, செவிலியர் பணியிடங்கள் 287, துணை மருத்துவம் மற்றும் தொழில்நுட்ப பணியாளர் பணியிடங்கள் 692 ஆகியவை காலியாக இருப்பதாக மத்திய அரசு ஒப்புக் கொண்டுள்ளது.
குறிப்பாக இப்பணியிடங்கள் முக்கிய மருத்துவ மையங்களான எய்ம்ஸ், சப்தர்ஜங் மருத்துவ மனை, ராம் மனோகர் லோகியா மருத்துவமனை, லேடி ஹார்டிங் மருத்துவக் கல்லூரி மற்றும் அதன் துணை மருத்துவமனைகளில் காலியாக இருப்பதாக குறிப் பிடப்பட்டுள்ளது. மக்கள் ஆரோக்கியமாக வாழ உரிய மருத் துவ வசதி களை அளிப்பது அரசின் கடமை. பத்திரிகைகளில் வெளி வந்துள்ள செய்தி உண்மையாக இருக்குமானால், அது மிகப் பெரிய பிரச்சினையாகும். இது ஒரு மனித உரிமை மீறல். எனவே, இதுகுறித்து மத்திய சுகாதாரத் துறை செயலர் எடுத்துள்ள நடவடிக்கை குறித்து நான்கு வாரங்களுக்குள் அறிக்கை அளிக்க வேண்டும்.
ஒப்பந்த அடிப்படையில் சில ஆண்டுகளுக்கு ஆட்களை நியமிப்பது மருத்துவ வசதி களை சிறந்த முறையில் அளிப் பதற்கு உதவாது. தொலை நோக்குப் பார்வையுடன் சிந்தித்து மத்திய அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும். இவ்வாறு நோட்டீஸில் கூறப்பட்டுள்ளது.