இந்தியா

சுஷ்மா - ஜான் கெர்ரி பேச்சுவார்த்தை

செய்திப்பிரிவு

அமெரிக்க வெளியுறவுத்துறை அமைச்சர் ஜான் கெர்ரி, மத்திய அமைச்சர் சுஷ்மா ஸ்வராஜ் இருவரும் வியாழக்கிழமை கூட்டாக தலைமையேற்று இந்தியா-அமெரிக்கா இடையிலான அதிமுக்கிய பேச்சுவார்த்தையை நடத்தினர்.

இந்த பேச்சில் பாதுகாப்பு, எரிசக்தி ஆகிய துறைகளில் மாற்றம் கொண்டு வருவதற்கான முன்முனைப்புகள் குறித்து இருதரப்பும் விவாதித்தன.

சுமார் ஒரு மணி நேரம் இரு தலைவர்களும் பிறர் இல்லாமல் பேச்சு வார்த்தை நடத்தினர். அதன்பிறகே இரு தரப்பு பிரதிநிதிகளும் கலந்துகொண்டனர். இதில் எரிசக்தி, தொழில்துறை உள்ளிட்ட பல்வேறு அமைச்சகங்களின் பிரதிநிதிகள் பங்கேற்றனர்.

இந்த பேச்சுவார்த்தைக்கு முன், நிதி, பாதுகாப்புத்துறை அமைச்சர் அருண் ஜேட்லியை அமெரிக்க வர்த்தக அமைச்சர் பென்னி பிரிட்ஸ்கருடன் சென்று கெர்ரி சந்தித்தார். உலக வர்த்தக ஒப்பந்தம் தொடர்பான பேச்சுவார்த்தையில் இந்தியாவின் நிலைப்பாடு பற்றி கெர்ரியுடன் ஜேட்லி விவாதித்தார்.

பிரதமர் நரேந்திர மோடி அமெரிக்காவுக்கு அரசுமுறைப் பயணம் மேற்கொள்ள உள்ள நிலையில் அதற்கு இரு மாதங்களுக்கு முன்னதாக இரு தரப்பு உறவுக்கு வலு ஏற்படுத்தும் விதமாக கெர்ரியின் இந்த பயணம் அமைந்துள்ளது.

SCROLL FOR NEXT