இந்தியா

நெடுஞ்சாலைகளில் 100 கி.மீ. வேகத்தில் காரில் செல்லலாம்

செய்திப்பிரிவு

கடந்த 1989-ம் ஆண்டு வெளியிடப்பட்ட சட்ட விதிகளின்படி சரக்கு வாகனங்கள் மணிக்கு 60 கி.மீ. வேகத்திலும், இருசக்கர வாகனங்கள் 50 கி.மீ., கனரக வாகனங்கள் 65 கி.மீ. வேகத்திலும் செல்லலாம் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. அதன் பிறகு வேகக்கட்டுப்பாடு தொடர்பாக எந்தவொரு மாற்றமும் செய்யப்படவில்லை.

இது தொடர்பாக 2006-ம் ஆண்டு மத்திய அரசு அமைத்த குழு தற்போது புதிய பரிந்துரைகளை அளித்துள்ளது. அதில், நெடுஞ்சாலைகளில் ஆட்டோ உள்ளிட்ட மூன்று சக்கர வாகனங்கள் மணிக்கு 60 கி.மீ. வேகத்திலும், இருசக்கர வாகனங்கள் 80 கி.மீ. வேகத்திலும், 8 இருக்கைகளுக்குக் குறைவாக உள்ள கார்கள் 100 கி.மீ. வேகத்திலும், சரக்கு வாகனங்கள் 80 கி.மீ. வேகத்திலும் செல்ல அனுமதிக்கலாம் என்று பரிந்துரைக்கப்பட்டுள்ளது. இது தொடர்பாக மத்திய அரசு ஆலோசனை நடத்தி வருகிறது.

SCROLL FOR NEXT