இந்தியா

கிர்கிஸ்தான் பனி மலையில் சிக்கி ஆந்திர மாணவர் உயிரிழப்பு

செய்திப்பிரிவு

அனகாபல்லி: ஆந்திர மாநிலம், அனகாபல்லி மாவட்டம், மாடுகுலா பகுதியை சேர்ந்த அல்வா வியாபாரி பீமராஜு. இவரது 2-வது மகன் தாசரி சந்து(21). எம்பிபிஎஸ் படிக்க இவர் கடந்த ஆண்டு கிர்கிஸ்தான் சென்றார்.

அங்கு தற்போது இவர் 2-ம் ஆண்டு படித்து வந்தார். இந்நிலையில், தேர்வுகள் முடிந்து விடுமுறை விடப்பட்டுள்ளதால், பல்கலைக்கழக நிர்வாகத்தினர் மாணவர்களை அருகில் உள்ள ஒரு பனிமலை நீர்வீழ்ச்சிக்கு கடந்த ஞாயிற்றுக்கிழமை அழைத்து சென்றுள்ளனர். இதில் ஆந்திராவை சேர்ந்த 5 மாணவர்களும் ஒன்றாக நீர்வீழ்ச்சியில் இறங்க சென்றனர்.

அப்போது மாணவர் தாசரி சந்து மட்டும் பனிமலை நீர்வீழ்ச்சியில் சிக்கி உயிரிழந்தார். இது குறித்த தகவலை பல்கலைக்கழக நிர்வாகிகள் கடந்த திங்கட்கிழமை மாலை அவரின் குடும்பத்தாருக்கு தெரிவித்துள்ளனர்.

தகவல் அறிந்ததும் தாசரி சந்துவின் குடும்பத்தினர் கதறி அழுதனர். தமது பிள்ளையின் சடலத்தை உடனடியாக தாயகம் கொண்டு வர அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டுமென தாசரி சந்துவின் தந்தை பீமராஜு வேண்டுகோள் விடுத்துள்ளார்.

SCROLL FOR NEXT