இந்தியா

இளம் சமூக ஊடக பிரபலம் சுர்பி ஜெயின் 30 வயதில் புற்றுநோயால் காலமானார்

செய்திப்பிரிவு

புதுடெல்லி: இன்ஸ்டாகிராமில் தனக்கென லட்சக்கணக்கான விசிறிகளைச் சம்பாதித்த இளம் பெண் சுர்பி ஜெயின் (30). அதிநவீன ஆடை அலங்காரத்தின் மூலம் பலரை கவர்ந்தவர். 27 வயதில் முதல்முறையாகக் கர்ப்பப்பை வாய்ப் புற்றுநோயால் பாதிக்கப்பட்டு அறுவை சிகிச்சை செய்து கொண்டார். பின்னர் வழக்கம்போல் உற்சாகமாக இன்ஸ்டாகிராமில் புகைப்படங்களை வெளியிட்டு வந்தார்.

கடந்த இரண்டு மாதங்களுக்கு முன்பு தனது இன்ஸ்டா பக்கத்தில் புகைப்படம் வெளியிட்டு அவர் எழுதிய கடைசி பதிவில், ‘‘இன்னும் சிகிச்சை தொடர்கிறது. எல்லாம் சீக்கிரம் முடிந்துவிட வேண்டுமென நினைக்கிறேன்’’ என்று பதிவிட்டிருந்தார். இந்நிலையில், கடந்த 18-ம் தேதி சுர்பி காலமானார். இதனால் பலர் அதிர்ச்சி அடைந்துள்ளனர்.

SCROLL FOR NEXT