பிரதமர் மோடி 
இந்தியா

பிற்படுத்தப்பட்ட மக்களை முந்தைய அரசுகள் ஏமாற்றின: பிரதமர் மோடி குற்றச்சாட்டு

செய்திப்பிரிவு

அம்ரோகா: மேற்கு உ.பி.யின் அம்ரோகா மக்களவைத் தொகுதியில் பாஜக வேட்பாளர் கன்வார் சிங் தன்வாரை ஆதரித்து பிரதமர் நரேந்திர மோடி நேற்று பேசியதாவது:

சமூகநீதி என்ற பெயரில் எஸ்சி, எஸ்டி மற்றும் பிற்படுத்தப்பட்ட வகுப்பினரை முந்தைய அரசுகள் ஏமாற்றி வந்தன. ஆனால் ஜோதிபாபுலே, அம்பேத்கர், முன்னாள் பிரதமர் சரண் சிங் ஆகியோரின் சமூக நீதி கனவை நிறைவேற்ற எனது அரசு இரவு பகலாக உழைத்து வருகிறது.

குண்டர்களின் ராஜ்ஜியத்தை உ.பி. மக்கள் ஒருபோதும் மறந்திருக்க முடியாது. ஆனால் முதல்வர் யோகி ஆதித்யநாத் உங்கள் பாதுகாப்புக்காக குற்றவாளிகளை ஒழித்தார். இந்த சக்திகள் மீண்டும் எந்த வகையிலும் பலப்படுத்தப்படாமல் இருப்பதை நீங்கள் உறுதிப்படுத்த வேண்டும்.

இண்டியா கூட்டணியில் உள்ளவர்கள் கிராமங்களை பின்னோக்கி நகர்த்த தங்கள் பலத்தை பயன்படுத்தி வருகின்றனர். இவ்வாறு அவர் பேசினார்.

SCROLL FOR NEXT