இந்தியா

நடிகை ஷில்பா ஷெட்டி, கணவரின்ரூ.98 கோடி சொத்து முடக்கம்: பிட்காயின் மோசடி வழக்கில் அமலாக்க துறை நடவடிக்கை

செய்திப்பிரிவு

மும்பை: பாலிவுட் நடிகை ஷில்பா ஷெட்டி மற்றும் அவரது கணவர் ராஜ் குந்த்ராவுக்கு சொந்தமான ரூ.98 கோடி மதிப்பிலான சொத்துகளை அமலாக்கத் துறை முடக்கியுள்ளது.

2017-ம் ஆண்டில் பிட்காயின் மூலம் அதிக வருவாய் ஈட்டித் தருவதாகக் கூறி பொது மக்களிடமிருந்து ரூ.6,600 கோடி பெற்று மோசடி செய்ததாக வேரியபில் டெக் நிறுவனத்தின் மீதும், அதனுடன் தொடர்புடைய அமித் பரத்வாஜ், அஜெய் பரத்வாஜ், விவேக் பரத்வாஜ், சிம்பி பரத்வாஜ், மகெந்தர் பரத்வாஜ் உள்ளிட்டோர் மீதும் மகாராஷ்டிரா மற்றும் டெல்லி காவல் துறை வழக்குப் பதிவு செய்தது.

இந்தத் திட்டத்துக்கு மூளையாகசெயல்பட்ட அமித் பரத்வாஜிடமிருந்து குந்த்ரா 285 பிட்காயின் வாங்கினார் என்றும் உக்ரைனில் பிட்காயின் மையம் அமைக்க திட்டமிட்டிருந்தார் என்றும் குற்றம் சாட்டப்பட்டது.

இந்தத் திட்டம் செயல்படுத்தப்படவில்லை என்ற போதிலும் ராஜ் குந்த்ரா 285 பிட்காய்ன்களை தன்வசமே வைத்துள்ளார் என்றும் இதன் தற்போதைய மதிப்பு ரூ.150 கோடி ஆகும் என்றும் அமலாக்கத் துறை குறிப்பிட்டுள்ளது.

இந்நிலையில், இவ்வழக்குத் தொடர்பாக ராஜ் குந்த்ரா மற்றும்அவரது மனைவி ஷில்பா ஷெட்டிக்கு சொந்தமான ரூ.98 கோடி மதிப்பிலான சொத்துகளை அமலாக்கத் துறை முடக்கிஉள்ளது.

மும்பை ஜுகு நகரில் ஷில்பா ஷெட்டிக்கு சொந்தமான வீடு மற்றும் ராஜ் குந்த்ரா பெயரில் புனேயில் உள்ள பங்களாவும் அவரது பங்குச் சந்தை முதலீடுகளும் முடக்கப்பட்டுள்ளன.

SCROLL FOR NEXT