கோப்புப்படம் 
இந்தியா

பிரதமர் மோடி குறித்து சர்ச்சைக்குரிய பதிவு: கேரள நபர் மீது வழக்கு

செய்திப்பிரிவு

திருவனந்தபுரம்: கேரளாவை சேர்ந்தவர் நபீல்நாசர். இவர் தனது முகநூல் பக்கத்தில் பிரதமர் மோடி குறித்து சர்ச்சைக்குரிய வகையில் அவதூறாக பதிவிட்டு வந்துள்ளார். இதைப் பார்த்த உள்ளூர் பாஜக ஆதரவாளர் ஒருவர், நபீல் நசீர் மீது காவல் துறையில் புகார் அளித்தார். இதையடுத்து பலோடு காவல் துறை நபீல் நசீர் மீது வழக்கு பதிவு செய்துள்ளது.

கலவரத்தைத் தூண்டுதல், தேர்தலை நோக்கமாகக் கொண்டு பொய் தகவலைப் பரப்புதல் போன்ற செயல்களில் ஈடுபட்டதாக நபீல் நாசர் மீது பல்வேறு பிரிவுகளின் கீழ் வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது. மார்ச் 20-ம்தேதி முதல் நபீல் நாசர் தனதுமுகநூல் பக்கத்தில் பிரதமர்மோடிக்கு எதிராக பதிவிட்டு வந்துள்ளதாக எப்ஐஆர்-ல் தெரிவிக்கப்பட்டுள்ளது.

SCROLL FOR NEXT