பிரியங்கா காந்தி | கோப்புப்படம் 
இந்தியா

அதிகாரம் நிலையற்றது: பாஜகவை விமர்சித்த பிரியங்கா காந்தி

செய்திப்பிரிவு

புதுடெல்லி: டெல்லி ராம்லீலா மைதானத்தில் நேற்று நடைபெற்ற இண்டியா கூட்டணியின் போராட்டத்தில் பங்கேற்ற பிரியங்கா காந்தி பேசியதாவது:

இன்று அதிகாரத்தில் இருப்பவர்கள் தங்களை ராம பக்தர்கள் என்று சொல்லிக்கொள்கின்றனர். நான் அவர்களுக்கு 1,000 வருட பழமையான கதையை சொல்ல விரும்புகிறேன். ராமர் உண்மைக்காகப் போராடியபோது அவரிடம் எந்த அதிகாரமோ, வளமோ கிடையாது. ராவணனிடம் எல்லாமும் இருந்தது.

ஆனால், ராமர் உண்மை, நம்பிக்கை, அன்பு, கனிவு, அடக்கம், பொறுமை, தைரியத்தைக் கொண்டிருந்தார். அவற்றின் மூலமே அவர் வென்றார். அதிகாரம் நிலையானது கிடையாது. ஆணவம் உடைந்துவிடும் என்றார்.

SCROLL FOR NEXT