பெங்களூர் ஊரக மாவட்டத்தில் 8 வயது பள்ளி சிறுமி பாலியல் பலாத்காரம் செய்யப்பட்டதை தொடர்ந்து, பள்ளியின் கவுரவ ஆசிரியரை (வயது 64) போலீஸார் செவ்வாய்க்கிழமை கைது செய்தன.
பெங்களூரில் கடந்த மாதம் பள்ளி வளாகத்தில் 6 வயது சிறுமி பாலியல் பலாத்காரம் செய்யப் பட்டதை அடுத்து போராட்டங்கள் வெடித்தன. 10-க்கும் மேற்பட்ட பெண்கள் பாலியல் பலாத்காரம் செய்யப்பட்டதால் கடந்த 31-ம் தேதி முழு அடைப்பு நடத்தப்பட்டது.
மேலும் பெங்களூரை அடுத்த தலகட்டப்புராவில் 3-ம் வகுப்பு படிக்கும் மாணவியை, கடந்த திங்கள்கிழமை சந்திரமவுலி என் பவர் பாலியல் பலாத்காரம் செய்த தாக புகார் எழுந்தது. சிறுமியின் பெற்றோர் அளித்த புகாரின் அடிப் படையில் தலக்கட்டப்புரா காவல்துறையினர், வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தினர்.
சந்திரமவுலியை தடுப்பு சட்டத் தின் கீழ் கைது செய்துள்ளனர். பாதிக்கப்பட்ட மாணவி படித்த அரசு பள்ளியில் கௌரவ ஆசிரிய ராக சந்திரமவுலி பணியாற்றி வரு வதும், மாணவியை பலாத்காரம் செய்ததும் தெரிய வந்துள்ளது. ராம்நகர் அரசு பொதுமருத்துவ மனையில் மாணவி அனுமதிக்கப் பட்டுள்ளார்.