ராய்ப்பூர்: சத்தீஸ்கரின் பீஜப்பூர் மாவட்டம், பாசகுடா காவல் நிலைய எல்லைக்குட்பட்ட சிபுர்பட்டி கிராமத்துக்கு அருகில், தல்பேரு ஆற்றின் நெடுகிலும் அமைந்துள்ள வனப் பகுதியில் மாவோயிஸ்ட்கள் இருப்பதாக போலீஸாருக்கு தகவல் கிடைத்தது.
இதையடுத்து மாவட்ட ரிசர்வ் போலீஸ், சிஆர்பிஎப் மற்றும் கோப்ராகமாண்டோ வீரர்கள் அடங்கிய கூட்டுப்படை அவர்களை தேடும் பணியில்நேற்று ஈடுபட்டது. அப்போது பாதுகாப்பு படையினர் – மாவோயிஸ்ட்கள் இடையே துப்பாக்கிச் சண்டை ஏற்பட்டது. இந்த மோதல் முடிவுக்கு வந்த பிறகு சம்பவ இடத்தில் இருந்து 2 பெண் உறுப்பினர்கள் உள்ளிட்ட 6 மாவோயிஸ்ட்களின் உடல்களை பாதுகாப்பு படையினர் மீட்டனர்.
சத்தீஸ்கரில் பஸ்தார் மக்களவைத் தொகுதியில் பீஜப்பூர் மாவட்டம் அமைந்துள்ளது. ஏப்ரல் 19-ம் தேதிமுதல்கட்ட தேர்தலை சந்திக்கும் தொகுதிகளில் பஸ்தாரும் உள்ளது.