கோப்புப்படம் 
இந்தியா

கர்நாடகாவில் லோக் ஆயுக்தா அதிகாரிகள் 60 இடங்களில் சோதனை

செய்திப்பிரிவு

பெங்களூரு: கர்நாடகாவில் ஏப்ரல், மே ஆகிய மாதங்களில் 2 கட்டங்களாக மக்களவைத் தேர்தல் நடைபெற உள்ளது. இதனால் அரசியல் கட்சியினர் வாக்காளர்களுக்கு பணம் விநியோகம் செய்வதற்காக பணத்தை அரசு அதிகாரிகள் மூலம் பதுக்கி வைத்திருப்பதாக லோக் ஆயுக்தா அதிகாரிகளுக்கு தகவல் கிடைத்தது.

இதையடுத்து அதிகாரிகள் நேற்று காலை 7 மணிக்கு பீதர் வட்டார போக்குவரத்து செயலர் சிவகுமார் சுவாமி, கோலார் மாவட்ட வருவாய்த்துறை கோட்டாட்சியர் நாகராஜப்பா, பாகல்கோட்டை வட்டார போக்குவரத்து அலுவலர் சதாசிவய்யா உள்ளிட்ட 13 அரசு அதிகாரிகளுடன் தொடர்புடைய 60 இடங்களில் சோதனை நடத்தினர். பெங்களூரு, மைசூரு, ராம்நகர், உத்தர கன்னடா, உடுப்பி, குடகு உள்ளிட்ட மாவட்டங்களில் சோதனை நடந்தது.

8 மணி நேரத்துக்கும் மேலாக நடந்த சோதனையில் முக்கிய ஆவணங்கள், லட்சக்கணக்கான ரூபாய் ரொக்கப்பணம், தங்க வைர நகைகள், ஆடம்பர வாகனங்கள் சிக்கியதாக லோக் ஆயுக்தா வட்டாரங்கள் தெரிவித்தன.

SCROLL FOR NEXT