கோப்புப்படம் 
இந்தியா

மேற்குவங்க அமைச்சரின் சகோதரர் வீட்டில் மீண்டும் சோதனை

செய்திப்பிரிவு

கொல்கத்தா: மேற்குவங்க அமைச்சர் அரூப் பிஸ்வாஸின் சகோதரரும், திரிணாமுல் காங்கிரஸ் கட்சி பிரமுகருமான ஸ்வரூப் பிஸ்வாஸ்க்கு சொந்தமான இடங்களில் வருமானவரித்துறை அதிகாரிகள் நேற்று முன்தினம் இரண்டாவது நாளாக சோதனை நடத்தினர்.

மேற்குவங்க அமைச்சர் அரூப் பிஸ்வாஸ். இவரது சகோதரர் ஸ்வரூப் பிஸ்வாஸும் திரிணாமுல் காங்கிரஸ் கட்சி பிரமுகராக உள்ளார். இவருக்கு சில ரியல் ஸ்டேட் நிறுவனங்களுடன் தொடர்பு உள்ளது. அந்த நிறுவனங்களிடமிருந்து ஸ்வரூப் பிஸ்வாஸ் வங்கி கணக்குக்கு அதிகளவில் பண பரிமாற்றம் நடைபெற்றது.

இது வருமான வரி விதிமுறைகளுக்கு எதிரானது என்பதால், ஸ்வரூப் பிஸ்வாஸ்க்கு சொந்தமான இடங்களில் கடந்த 2 நாட்களாக வருமானவரித்துறையினர் சோதனை நடத்தினர்.

SCROLL FOR NEXT