ஜம்மு - காஷ்மீர் மாநிலம் அவந்திபோராவில் உள்ள இந்திய விமானப்படை தளத்திற்கு அருகே தீவிரவாதிகள் நடத்திய தாக்குதலில் எல்லை பாதுகாப்புப் படை வீரர்கள் இருவர் கொல்லப்பட்டனர்.
இதேபோல், ஜம்மு - காஷ்மீர் மாநிலம் புல்வாமா மாவட்டத்தில் எல்லை பாதுகாப்பு வீரர்கள் வாகனத்தை குறிவைத்து தீவிரவாதிகள் தாக்குதல் நடத்தியதில் 6 வீரர்கள் காயமடைந்தனர்.
கடந்த 11-ம் தேதி ஜம்மு - காஷ்மீர் மாநிலம் ஸ்ரீநகரில் தீவிரவாதிகள் நடத்திய தாக்குதலில் எல்லை பாதுகாப்புப் படை கமாண்டன்ட் உள்ளிட்ட 8 வீரர்கள் பேர் காயமடைந்தனர்.
இந்தியாவை நேரடியாக போர்க் களத்தில் சந்திக்க பலம் இல்லாமல் பாகிஸ்தான் இந்தியா மீது தீவிரவாத தாக்குதல்களை கட்டவிழ்த்துவிட்டு மறைமுக போர் நடத்துகிறது என பிரதமர் நரேந்திர மோடி அண்மையில் தனது கண்டனத்தை பதிவு செய்திருந்தது கவனிக்கத்தக்கது.
ஜூலை மாதத்தில் எல்லையில் பாகிஸ்தான் 8 முறை அத்துமீறி தாக்குதல் நடத்தியிருக்கிறது. ஜூன் மாதம் 5 முறை அத்துமீறியுள்ளது. ஏப்ரல் - மே காலகட்டத்தில் மொத்த, 19 முறை பாகிஸ்தான் ராணுவம் எல்லையில் அத்துமீறியிருக்கிறது.