இந்தியா

நிரவ் மோடி பாஜகவின் கூட்டாளி: சிவசேனா தாக்கு

ஏஎன்ஐ

பஞ்சாப் நேஷனல் வங்கியில் ரூ.280 கோடி மோசடியும், ரூ.11 ஆயிரத்து 600 கோடி சட்டவிரோத பரிவர்த்தனையும் செய்த வகையில் இன்று நாடு முழுவதும் பரபரப்பாக பேசப்படும் நிரவ் மோடி பாஜகவின் கூட்டாளி என சிவசேனா கட்சி தாக்கியுள்ளது.

சிவசேனாவின் அதிகாரபூர்வ கட்சியான சாம்னாவில், "நிரவ் மோடி பாஜகவின் கூட்டாளி. பாஜகவுக்கு தேர்தல் நேரங்களில் நிரவ் மோடி உதவி செய்துள்ளார். விவசாயக் கடன்களை திருப்பிச் செலுத்த முடியாமல் இங்கு விவசாயிகள் தற்கொலை செய்துகொண்டிருக்கின்றனர். ஆனால், சிலரோ மிகப்பெருந் தொகையுடன் தப்பியோடிக் கொண்டிருக்கின்றனர். டாவோஸ் மாநாட்டில் பிரதமர் நரேந்திர மோடியுடன் நிரவ் மோடியும் இருந்தார்.

மும்பையில் சக்கன் புஜ்பாலும், பாட்னாவின் லாலு பிரசாத் யாதவும் சிறைக் கம்பிக்கு பின்னால் உள்ளனர். ஆனால் விஜய் மல்லையாவும், நிரவ் மோடியும் கோடிக் கணக்கான பணத்துடன் தப்பியோடிவிட்டனர்" என எழுதப்பட்டுள்ளது.

பஞ்சாப் நேஷனல் வங்கி முறைகேடுகள் வெளியானபின், நிரவ் மோடி, அவரின் மனைவி அமி, சகோதரர் நிஷால், ஆகியோர் மீது சிபிஐ வழக்கு பதிவு செய்து லுக் அவுட் நோட்டீஸ் கொடுக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

SCROLL FOR NEXT