பிரதமர் மோடி | கோப்புப் படம் 
இந்தியா

என்டிஏவுக்கு அமோக ஆதரவு @ தமிழ்நாடு, கர்நாடகா, தெலங்கானா: பிரதமர் மோடி நெகிழ்ச்சி

செய்திப்பிரிவு

புதுடெல்லி: தெலங்கானா, கர்நாடகா, தமிழ்நாடு எந்த மாநிலமாக இருந்தாலும் என்டிஏவுக்கு மக்கள் மத்தியில் அமோக ஆதரவு இருப்பதாக பிரதமர் நரேந்திர மோடி நெகிழ்ச்சி பொங்க தெரிவித்துள்ளார்.

இது தொடர்பாக இன்று (திஙகள்கிழமை) பிரதமர் மோடி தனது எக்ஸ் சமூகவலைதளப் பக்கத்தில், “நான் இன்று ஜக்டியால், ஷிவ்மோகாவில் பிரச்சாரம் செய்கிறேன். மாலை கோவையில் சாலைப் பேரணியில் பங்கேற்கிறேன். தெலங்கானா, கர்நாடகா, தமிழ்நாடு எந்த மாநிலமாக இருந்தாலும் என்டிஏவுக்கு பலத்த ஆதரவு இருக்கிறது” என்று பதிவிட்டுள்ளார்.

முன்னதாக நேற்று (ஞாயிற்றுக்கிழமை), ஆந்திர மாநிலம், பல்நாடு மாவட்டம் சிலகலூரிபேட்டாவில் தேசிய ஜனநாயகக் கூட்டணி சார்பில் நேற்று தேர்தல் பிரச்சார பொதுக்கூட்டம் நடைபெற்றது. இதில் பிரதமர் நரேந்திர மோடி, தெலுங்கு தேசம் கட்சி தலைவர் சந்திரபாபு நாயுடு மற்றும் ஜனசேனாகட்சி தலைவர் பவன் கல்யாண் ஆகியோர் ஒரே மேடையில் பிரச்சாரம் செய்தனர்.

தொடர்ந்து இன்று (திங்கள்கிழமை) கர்நாடகாவின் சிவமோகாவில் பிரதமர் இன்று பிரச்சாரம் மேற்கொள்கிறார். இன்று மாலை அவர் தமிழகம் வருகிறார். 2024 தொடங்கியதில் இருந்து பிரதமர் தமிழகம் வருவது இது 6வது முறை. கோவையில் ரோடு ஷோ, சேலத்தில் நாளை (செவ்வாய்க்கிழமை) பொதுக்கூட்டம் என பிரதமர் பங்கேற்கிறார்.

தென் மாநிலங்களைக் குறிவைத்து பிரதமர் சூறாவளி சுற்றுப் பயணங்களை மேற்கொள்ளும் சூழலில், தெலங்கானா, கர்நாடகா, தமிழ்நாடு எந்த மாநிலமாக இருந்தாலும் என்டிஏவுக்கு அமோக ஆதரவு இருப்பதாக பிரதமர் நரேந்திர மோடி தெரிவித்துள்ளார்

முன்னதாக இன்று காலை கோவையில் செய்தியாளர்களை சந்தித்த மத்திய இணை அமைச்சர் எல்.முருகன், ”கடந்த ஒரு வாரமாக தென்னிந்தியா முழுவதும் தீவிர பிரச்சாரத்தில் ஈடுபட்டு வருகிறோம். பிரதமரின் வருகை தமிழகத்தில், பாஜகவுக்கு மிகப்பெரிய ஊக்கத்தை தந்திருக்கிறது. தமிழ் மக்களுக்கு மிகப்பெரிய நம்பிக்கையை ஏற்படுத்தியுள்ளது.” என்று கூறியிருந்தது குறிப்பிடத்தக்கது.

SCROLL FOR NEXT