இந்தியா

‘ஒரே நாடு, ஒரே தேர்தல்’ காஷ்மீரில் அமல்படுத்த பொன்னான வாய்ப்பு: உமர் அப்துல்லா

செய்திப்பிரிவு

காஷ்மீர் முன்னாள் முதல்வரும், தேசிய மாநாட்டு கட்சியின் துணைத் தலைவருமான உமர் அப்துல்லா நேற்று அளித்த பேட்டியில் கூறியதாவது: ஜம்மு காஷ்மீரில் கடந்த 10 ஆண்டுகளாக சட்டப்பேரவை தேர்தல் நடைபெறவில்லை.

இங்கு மீண்டும் ஜனநாயகத்தை ஏற்படுத்த, தேர்தல் ஆணையம் முக்கிய பங்காற்ற வேண்டும். ‘ஒரே நாடு, ஒரே தேர்தல் அறிக்கையை முன்னாள் குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த் தலைமையிலான குழு சமர்ப்பித்துள்ளது.

இந்த கொள்கையை ஜம்மு காஷ்மீரில் இருந்து தொடங்க இது பொன்னான வாய்ப்பு. இதை காஷ்மீரில் இருந்து தொடங்கவில்லை என்றால், மக்களை மத்திய அரசு முட்டாள்களாக்குகிறதா? காஷ்மீரில் மக்களவை தேர்தலுடன், சட்டப்பேரவை தேர்தலையும் நடத்தி, அவர்கள் ஜனநாயகத்தை மீண்டும் ஏற்படுத்தட்டும். தேர்தல் ஆணையத்திடம் இருந்து எங்களுக்கு வேறு எந்த எதிர்பார்ப்பும் இல்லை. இவ்வாறு உமர் அப்துல்லா கூறினார்.

SCROLL FOR NEXT