இந்தியா

மோடி அரசில் அமைச்சர்களுக்கு சுதந்திரம் உள்ளது: ஜேட்லி

செய்திப்பிரிவு

பிரதமர் நரேந்திர மோடியின் அரசில், அதி காரம் பரவலாக்கப்பட்டுள்ளது என்றும் அதனால் அனைத்து அமைச்சர்களுக்கும் சுதந்திரம் கிடைக்கிறது என்றும் மத்திய நிதி அமைச்சர் அருண் ஜேட்லி தெரி வித்துள்ளார்.

டெல்லியில் நடந்த செய்தியாளர் சந்திப்பில் மேலும் அவர் கூறியதாவது:

"பிரதமர் மோடியிடமே அனைத்து அதி காரங்களும் இருப்பதாகவும் அதனால் அமைச்சர்கள் சுதந்திரம் இல்லாமல் தவிக்கிறார்கள் என்பதெல்லாம் தவறான கருத்துகள் ஆகும். மோடி தன்னிடம் உள்ள அதிகாரத்தைப் பரவலாக்கியுள்ளார். அதனால் அனைத்து அமைச்சர்களுக்கும் சுதந்திரம் கிடைக்கிறது.

உதாரணத்திற்கு என்னையே எடுத்துக்கொள்ளுங்கள். நான் நிதி அமைச்சகம் மட்டுமல்லாது வேறு சில அமைச்சகங்களையும் மேற்பார்வை யிடுகிறேன். எல்லா முடிவுகளையும் அமைச்ச கமே எடுக்கிறது. சில முக்கியமான முடிவுகள் மட்டும் பிரதமர் அலுவலகத்துக்குத் தெரியப்படுத்தப்படுகிறது. எனினும், என்னதான் சுதந்திரம் கிடைத்தாலும் அதற்கு நாங்கள் பொறுப்புடையவர்களாக இருக்க வேண்டும். சுமார் 30 ஆண்டுகளுக்குப் பிறகு நாடாளுமன்றத்தில் தனிப்பெரும்பான்மை யுடன் கட்சி அமைந்திருப்பதால், விரைவாக முடிவுகள் எடுப்பது சுலபமாகியுள்ளது" என்றார்.

மேலும் அவர், காப்பீட்டுத் துறையில் அந்நிய முதலீடு உள்ளிட்ட விஷயங்கள், திருத்தங்கள் அனைத்தும் அடுத்த நாடாளு மன்றக் கூட்டத் தொடரில் விவாதிக்கப்படும் என்றார். இந்தியா மற்றும் பாகிஸ்தானுக்கிடை யேயான பேச்சு வார்த்தை குறித்து எழுப்பப்பட்ட கேள்விக்கு 'எல்லையில் பாகிஸ்தான் படைகள் போர் நிறுத்த உடன்பாட்டை மீறி இந்தியாவின் மீது தாக்குதல் நடத்தி வருகின்றன. இது இரு நாட்டு நல்லுறவுக்கு உகந்ததாக இல்லை' என்றார்.

SCROLL FOR NEXT