இந்தியா

ராணுவத்தை அவமதிப்பதா: மோகன் பகவத்துக்கு ராகுல் கண்டனம்

ஏஎன்ஐ

இந்திய ராணுவத்தை அவமதிக்கும் விதத்தில் ஆர்.எஸ்.எஸ். தலைவர் மோகன் பகவத்பேசியதாக காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி கண்டனம் தெரிவித்துள்ளார்.

"ஆர்.எஸ்.எஸ். தலைவர் மோகன் பகவத்தின் பேச்சு ஒவ்வொரு இந்தியருக்கும் ஏற்பட்ட அவமதிப்பு. இந்தியாவுக்காக உயிர்நீத்தவர்களை அவமதிக்கும் வகையில் அவர் பேசியுள்ளார். இது தேசியக்கொடியையும் அவமதிக்கும் செயல். ஏனெனில் அதை வணங்கிய ஒவ்வொரு வீரரையும் மோகன் பகவத் அவமதித்துள்ளார். தேசத்தின் ராணுவத்தையும் தேசத்துகாக உயிர் நீத்த தியாகிகளையும் அவமதித்தது பெருத்த அவமானம்" என ட்விட்டரில் தெரிவித்திருக்கிறார். #ApologiseRSS என்ற ஹேஷ்டேக் கீழ் அதை அவர் பகிர்ந்துள்ளார்.

முன்னதாக, ஆர்.எஸ்.எஸ். தலைவர் மோகன் பகவத், "தேசத்துக்காக போரிட வேண்டியத் தேவை ஏற்பட்டால் மூன்றே நாட்களில் ஒரு ராணுவத்தையே உருவாக்கும் திறன் கொண்டது" எனக் கூறியிருந்தார்.

SCROLL FOR NEXT