இந்தியா

முகமது காசிம் குஜ்ஜார் தீவிரவாதியாக மத்திய அரசு அறிவிப்பு

செய்திப்பிரிவு

புதுடெல்லி: தீவிரவாத செயல்களில் ஈடுபட்டு வந்த லஷ்கர் இயக்கத்தைச் சேர்ந்த முகமது காசிம் குஜ்ஜார் என்பவரை தீவிரவாதியாக மத்திய அரசு நேற்று அறிவித்தது. இதுகுறித்து மத்திய அரசு வெளியிட்ட அறிவிப்பில் கூறியிருப்பதாவது:

குஜ்ஜார் என அழைக்கப்படும் முகமது காசிம் சல்மான் நாட்டுக்கு எதிரான தீவிரவாத செயல்களில் ஈடுபட்டு வந்துள்ளார். டிரோன்கள் மூலம் எல்லை கடந்து வரும் ஆயுதங்கள், வெடிபொருட்கள், பணம் போன்றவற்றின் விநியோகத்தில் இவருக்கு தொடர்பு உள்ளது. சமூக ஊடகம் மூலம் இவர் தீவிரவாத இயக்கங்களுக்கு ஆட்களை சேர்க்கும் நடவடிக்கையில் ஈடுபட்டுள்ளார்.

அவரை மத்திய அரசு தீவிரவாதியாக அறிவித்துள்ளது. இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

SCROLL FOR NEXT