இந்தியா

டி.கே.சிவகுமார் மீதான வழக்கு ரத்து

செய்திப்பிரிவு

புதுடெல்லி / பெங்களூரு: கடந்த 2017-ல் கர்நாடக துணை முதல்வரும், காங்கிரஸ் மாநிலத் தலைவருமான டி.கே.சிவகுமாரின் வீடு, அலுவலகத்தில் வருமான வரி அதிகாரிகள் சோதனை நடத்தினர்.

இதுதொடர்பாக வருமான வரித்துறை வழக்குப்பதிவு செய்து விசாரித்த நிலையில், 2018-ல் அமலாக்கத் துறை சட்ட விரோத பணப் பரிவர்த்தனை வழக்கினை பதிவு செய்தது. இவ்வழக்கில் டி.கே.சிவகுமார் கைது செய்யப் பட்டார். இந்த வழக்கை ரத்து செய்யக் கோரி கர்நாடக உயர் நீதிமன்றத்தில் அவர் தாக்கல் செய்த மனு தள்ளுபடி செய்யப்பட்டது. இதை எதிர்த்து உச்ச நீதிமன்றத்தில் அவர் மேல்முறையீடு செய்தார்.

இந்த வழக்கை விசாரித்த நீதிபதிகள், ''டி.கே.சிவகுமார் மீதான கூட்டுசதி குற்றச்சாட்டை அமலாக்கத் துறை நிரூபிக்கவில்லை. அவர் மீது சட்டவிரோத பணப்பரிவர்த் தனை வழக்கு தொடர முடியாது. அமலாக்கத் துறை பதிவு செய்த வழக்கு ரத்து செய்யப்படுகிறது'' என உத்தரவிட்டனர்.

SCROLL FOR NEXT