இந்தியா

பாம்பின் தலையை கடித்துத் துப்பிய விவசாயி: பழிக்குப் பழி வாங்கியதாகவும் விளக்கம்

ஏஎன்ஐ

உத்தரப் பிரதேச மாநிலத்தில் ஹர்தோய் மாவட்டத்தில் அரிய நிகழ்வு ஒன்று நடந்துள்ளது.

விவசாயி ஒருவர் பாம்பின் தலையை கடித்துத் துப்பியதோடு அதை பழி வாங்கவே அப்படி செய்ததாகவும் கூறியது அதிர்ச்சியையும் ஆச்சரியத்தையும் ஏற்படுத்தியுள்ளது.

ஹர்தோய் மாவட்டத்தைச் சேர்ந்தவர் சோனேலால். இவர் பாம்பு கடித்து மயங்கி விழுந்ததாகக் கருதி ஊர்க்காரர்கள் அவரை மருத்துவமனையில் சேர்துள்ளனர். அவரது உடலில் பாம்பு கடித்த அடையாளமே இல்லை எனக் கூறிய மருத்துவர்கள் அவர் மயக்க நிலையில் இருந்ததால் அதற்கேற்ற சிகிச்சை அளித்தனர். மூன்று மணி நேரத்துக்குப்பின் நினைவு திரும்பியதும் விவசாயி நடந்ததை விவரித்தார்.

"நான் எனது கால்நடைகளுக்காக புற்களை அறுத்து எடுத்துக் கொடிருந்தேன். அப்போது என்னை ஒரு பாம்பு கடித்தது. அதனால், என்னைக் கடித்த பாம்பை பழிவாங்க அதனைப் பிடித்து அதன் தலையைக் கடித்து மென்று துப்பினேன்" என்றார்.

அப்போதுதான் மருத்துவர்களுக்கே விளங்கியது பாம்பின் தலையைக் கடித்ததாலேயே அவருக்கு மயக்கம் ஏற்பட்டுள்ளது, மற்றபடி பாம்பு அவரைக் கடிக்கவில்லை என்பது. சோனேலாலுக்கு போதைப் பழக்கம் இருப்பதாக ஊர்க்காரர்கள் கூறினர். அதன் தாக்கத்தினால் இப்படி நடந்திருக்கலாம் எனவும் மருத்துவர்கள் கூறினர்.

SCROLL FOR NEXT