இந்தியா

மனநலம் பாதித்த நபரின் வயிற்றில் 39 நாணயம், 37 காந்தங்கள் அகற்றம்

செய்திப்பிரிவு

புதுடெல்லி: டெல்லியில் உள்ள சர் கங்கா ராம் மருத்துவமனையில் சில நாட்களுக்கு முன்பு ஒருவர் கடும் வயிற்று வலி காரணமாக அனுமதிக்கப்பட்டார்.

அவர் கடந்த சில வாரங்களாக நாணயங்கள் மற்றும் காந்தங்களை விழுங்கி வந்தார்எனவும், அவர் ஏற்கெனவே மனநல சிகிச்சை பெற்றவர் எனவும் அவரது உறவினர்கள் தெரிவித்தனர். அந்த நபரின் வயிற்றை எக்ஸ்ரே மற்றும் சிடி ஸ்கேன் செய்து பார்த்ததில் அவரது சிறுகுடலில் அதிகளவிலான நாணயங்கள் மற்றும் காந்தங்கள் அடைத்திருந்தது தெரியவந்தது. இதையடுத்து அவருக்கு உடனடியாக அறுவை சிகிச்சை செய்து நாணயங்கள், காந்தங்கள் அகற்றப்பட்டது. அதில் 39 நாணயங்கள் (ரூ.1,2 மற்றும் 5) இருந்தன. பல வடிவிலான 37 காந்தங்களும் இருந்தன.

SCROLL FOR NEXT