இந்தியா

மகாராஷ்டிராவில் மகா விகாஸ் அகாடி 39 தொகுதியில் போட்டி

செய்திப்பிரிவு

மும்பை: மகாராஷ்டிராவில் மொத்தம் 48 மக்களவை தொகுதிகள் உள்ளன. இங்கு கடந்த 2019-ம் ஆண்டு நடைபெற்ற மக்களவை தேர்தலில் பாஜக - சிவசேனா கூட்டணி 41 இடங்களில் வென்றது. தேசியவாத காங்கிரஸ் மற்றும் காங்கிரஸ் கூட்டணி 5 இடங்களை வென்றது.

இந்நிலையில் கோல்ஹாபூரில் சத்ரபதி சிவாஜி குடும்பத்தைச் சேர்ந்த சத்ரபதி ஷாஹு மகாராஜை சரத் பவார் நேற்று சந்தித்தார். அவரை மக்களவை தேர்தலில் மகா விகாஸ் அகாடி கூட்டணி வேட்பாளராக நிறுத்துவதற்கு சரத்பவார் விருப்பம் தெரிவித்தார். பின்னர் சரத் பவார் கூறும்போது, ‘‘மகாராஷ்டிராவில் 39 தொகுதிகளில் மகா விகாஸ் அகாடி போட்டியிட ஒருமனதாக முடிவு செய்துள்ளது. மீதமுள்ள தொகுதிகளில் போட்டியிடுவது குறித்து நாங்கள் ஆலோசனை நடத்த உள்ளோம்’’ என்றார்.

SCROLL FOR NEXT