இந்தியா

22 இந்தியர்களுடன் சென்ற கப்பல் மேற்கு ஆப்பிரிக்க கடலில் திடீர் மாயம்

பிடிஐ

22 இந்தியர்களுடன் சென்ற மும்பையைச் சேர்ந்த எண்ணெய் கப்பல் மேற்கு ஆப்பிரிக்க கடலில் உள்ள கினியா வளைகுடாவில் திடீரென மாயமானது.

இதையடுத்து, அபுஜாவில் உள்ள இந்தியத் தூதரகம் நைஜீரியா, பெனின் நாட்டு அரசு அதிகாரிகளுடன் தொடர்பில் இருந்து வருகின்றனர்.

இது குறித்து மத்திய வெளியுறவுத்துறை செய்தித்தொடர்பாளர் ரவீஷ்குமார் ட்விட்டரில் வெளியிட்ட பதிவில் கூறியிருப்பதாவது-

மும்பையைச் சேர்ந்த ஆங்கிலோ ஷிப்பிங் கம்பெனிக்கு சொந்தமான எண்ணெய் கப்பல் 22 இந்தியர்களுடன் மேற்கு ஆப்பிரிக்கா கடல்பகுதியில் பெனின் நாட்டுக்கு அருகே கினியா வளைகுடாவில் வரும் போது மாயமானது.

இது குறித்து நைஜீரியா அரசு அதிகாரிகளுடனும், பெனின் நாட்டு அதிகாரிகளுடனும் மத்திய அரசு தொடர்ந்து தகவல் கேட்டு வருகிறது. அந்த கப்பலின் தடம் குறித்து கண்காணிக்கப்பட்டு வருகிறது.

இந்த கப்பல் குறித்து தகவல் அறியவிரும்புவர்களுக்கு உதவி எண்களாக +2349070343860அறிவிக்கப்பட்டுள்ளது.

இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.

SCROLL FOR NEXT