இந்தியா

பிஹாரை தொடர்ந்து ஜார்க்கண்ட் | விரைவில் சாதிவாரி கணக்கெடுப்பு - முதல்வர் சம்பாய் சோரன் தகவல்

செய்திப்பிரிவு

ராஞ்சி: பிஹாரை அடுத்து ஜார்கண்ட் மாநிலத்தில் சாதிவாரி மக்கள் தொகை கணக்கெடுப்பு நடத்த அம்மாநில முதல்வர் சம்பய் சோரன் உத்தரவிட்டுள்ளார். முதல்வர் சம்பாய் சோரன் இந்த கணக்கெடுப்புக்கு அனுமதி அளித்துள்ளார் என்று அம்மாநில அதிகாரி ஒருவர் உறுதிப்படுத்தியுள்ளார்.

இதுதொடர்பாக ஜார்கண்ட் மாநில பணியாளர் துறை அதிகாரி ஒருவர், ‘ஒரு வரைவை தயார் செய்து அமைச்சரவையின் ஒப்புதலுக்கு வைக்குமாறு முதல்வர் உத்தரவிட்டுள்ளார்." என்று தெரிவித்துள்ளார். முதல்வரின் முதன்மைச் செயலாளர் வினய் குமார் சவுபே கூறுகையில், "கடந்த ஆண்டு ஜனவரி 7 முதல் அக்டோபர் 2 வரை சேகரிக்கப்பட்ட தரவுகளின் அடிப்படையில் சாதிவாரி கணக்கெடுப்பு நடத்தப்படும். எல்லாம் திட்டமிட்டபடி நடந்தால், லோக்சபா தேர்தலுக்குப் பிறகுதான் கணக்கெடுப்பு தொடங்கும்." என்று தெரிவித்துள்ளார்.

முதல்வர் சம்பாய் சோரன் தனது எக்ஸ் தள பதிவில், "பெரிய மக்கள் தொகை, பெரிய பங்கு. ஜார்கண்ட் தயாராக உள்ளது" என்று சாதிவாரி மக்கள் தொகை கணக்கெடுப்பை உறுதிப்படுத்தியுள்ளார்.

SCROLL FOR NEXT