டேராடூன்: உத்தராகண்ட் மாநிலம் ஹல்த்வானி நகரில் அரசு நிலத்தில் சட்டவிரோதமாக கட்டப்பட்ட மதரஸாமற்றும் மசூதி கடந்த வியாழக்கிழமை இடிக்கப்பட்டது அப்போது வன்முறை மூண்டதில் 5 பேர் உயிரிழந்தனர்; 50-க்கும்மேற்பட்டோர் காயமடைந்தனர். காவல் நிலையத்தில் புகுந்துவன்முறையாளர்கள் தாக்கியதில்போலீஸாரும் காயமடைந்தனர்.இதையடுத்து, பாதுகாப்புக்காக கூடுதலாக மத்திய படைகளை அனுப்புமாறு மத்திய அரசிடம் உத்தராகண்ட் அரசு கோரிக்கைவிடுத்துள்ளது.
பன்பூல்புராவை சுற்றியுள்ள பகுதிகளில் பதற்றமான சூழல் நிலவி வருவதையடுத்து அங்குஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. 1,000-க்கும் மேற்பட்டகாவலர்கள் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர்.
இந்த நிலையில், கடந்த 24 மணி நேரத்தில் வன்முறை தொடர்பாக 30 பேர் கைது செய்யப்பட்டுள்ளதாகவும், அவர்களிடமிருந்து துப்பாக்கி உள்ளிட்ட ஆயுதங்கள் கைப்பற்றப்பட்டுள்ளதாகவும் போலீஸார் தெரிவித்தனர்.
இதனிடையே உத்தராகண்ட் தலைமைச் செயலர் ராதா ரதுரி மத்திய உள்துறை செயலாளருக்கு எழுதிய கடிதத்தில்,வன்முறையை கட்டுப்படுத்தமத்திய துணை ராணுவத்தைச் சேர்ந்த 4 கூடுதல் கம்பெனி படைப்பிரிவுகளை உத்தராகண்ட் மாநிலத்துக்கு அனுப்பி வைக்குமாறு தெரிவித்துள்ளார்.
மாநிலத்தில் அமைதி மற்றும் நல்லிணக்கத்தை சீர்குலைக்க முயற்சிக்கும் சமூக விரோதிகள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும். அத்துடன் சட்ட விரோத ஆக்கிரமிப்பாளர்கள் மீது தனது அரசு எந்த விதத்திலும் கருணை காட்டாது என உத்தரா கண்ட் மாநில முதல்வர் புஷ்கர் சிங் தாமி கூறியுள்ளார்.