கோப்புப்படம் 
இந்தியா

டெல்லியில் நாளை விவசாயிகள் போராட்டம்: தடுக்கும் முயற்சியில் மத்திய அரசு பேச்சுவார்த்தை

ஆர்.ஷபிமுன்னா

புதுடெல்லி: டெல்லியின் எல்லைகளில் 2020-ம் ஆண்டு நவம்பரில் விவசாயிகளின் தொடர் போராட்டம் நடைபெற்றது. ஒரு வருடத்திற்கும் மேலாக தொடர்ந்த இந்த போராட்டத்தில் பல விவசாயிகள் உயிரிழந்தனர். இதேபோன்று மீண்டுமொரு தொடர் போராட்டத்தை பஞ்சாப், ஹரியாணா விவசாயிகள் கையில் எடுக்கத் திட்டமிட்டுள்ளனர்.

சம்யுக்தா கிசான் மோர்ச்சா, கிசான் மஜ்தூர் மோர்ச்சா உள்ளிட்ட 200 விவசாய அமைப்புகள் இதற்கு ஆதரவு தெரிவித்துள்ளன. நாளை பிப்ரவரி 13 -ல் இந்த போராட்டம் நடைபெறும் என்று விவசாயிகளின் சார்பில் அறிவிக்கப்பட்டுள்ளது. விவசாய விளைபொருட்களுக்கு குறைந்தபட்ச விலை நிர்ணயம் உள்ளிட்டப் பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி ராஜஸ்தான், உ.பி., பிஹார், கேரளா உள்ளிட்ட மாநிலங்களைச் சேர்ந்தவிவசாயிகள் இந்த போராட்டத்தில் பங்கேற்கின்றனர்.

கோரிக்கைகள் நிறைவேறும்வரை போராட்டத்தை தொடர விவசாயிகள் திட்டமிட்டுள்ளனர் என்றும், இதற்காக அவர்கள் டிராக்டர்களுடன் பலமுறை ஒத்திகை பார்த்ததாகவும் மத்திய உளவுத் துறை எச்சரித்துள்ளது.

எனவே, தேர்தல் நேரத்தில் மத்திய அரசிற்கு தலைவலியாகஉருவெடுக்கும் இப்போராட்டத்தைதடுத்து நிறுத்த மத்திய விவசாயத்துறை அமைச்சர் அர்ஜுன் முண்டா,மத்திய உணவு மற்றும் வர்த்தகத் துறை அமைச்சர் பியூஷ் கோயல் மற்றும் மத்திய உள்துறை இணை அமைச்சர் நித்தியானந்த் ராய் ஆகியோர் விவசாயிகளிடம் பேச்சுவார்த்தை நடத்த நியமிக்கப்பட்டுள்ளனர். இம்மூவரும் சண்டிகரில் கடந்த 8-ம் தேதி முதல் கட்டமாகவிவசாயிகளுடன் பேச்சுவார்த்தையை துவங்கினர். அதன்பிறகுபிப்.10, 11 மற்றும் 12 ஆகிய தேதிகளிலும் பேச்சுவார்த்தை தொடரும் என அறிவிக்கப்பட்டது. இதற்கான ஏற்பாடுகளை பஞ்சாப் முதல்வர் பகவந்த் சிங் மான் செய்திருந்தார்.

இந்த பேச்சுவார்த்தைகளில் எடுக்கப்பட்ட முடிவுகளின்படி, கடந்த விவசாயிகள் போராட்டத்தில் தொடுக்கப்பட்ட வழக்குகள் வாபஸ்பெறவும், போலி விதை விற்பனை செய்வோர் மீது கடும் நடவடிக்கை எடுக்கவும் மத்திய அரசு ஒப்புதல் தெரிவித்துள்ளதாக கூறப்படுகிறது.

இதனிடையே பஞ்சாபில் இருந்து 2,000 டிராக்டர்கள், உ.பி.யில் இருந்து 500, ராஜஸ்தானில் இருந்து 200 டிராக்டர்களில் வந்து டெல்லி எல்லைகளை முற்றுகையிட விவசாயிகள் திட்டமிட்டுள்ளனர். எனவே, இந்த நடவடிக்கைகளை முறியடிக்க பாஜக ஆளும் ஹரியாணா அரசு அதிக தீவிரம்காட்டி வருகிறது. டெல்லி எல்லையையொட்டிய மாவட்டங்களான அம்பாலா, குருஷேத்ரா, கைதால், ஜிந்த், ஹிசார், பதேஹாபாத் மற்றும்ஹிசாரில் இணையம் மற்றும் குறுந்தகவல் சேவைகளை துண்டிக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. எல்லைகளின் முக்கிய சாலை களில் தடுப்பு வேலிகளும் அமைக் கப்பட்டுள்ளன.

டெல்லி காவல் துறையினரும் போராட்டத்தை ஒடுக்கும் முயற்சியில் ஈடுபட்டுள்ளனர். இதற்காக,டெல்லி, பஞ்சாப் மற்றும் ஹரியாணாமாநில எல்லைகளில் கூட்டங்கள்கூடுவதற்கு 144 தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. அப்பகுதிகளில்மத்திய பாதுகாப்பு படை வீரர்கள் கண்காணிப்பு பணியில் ஈடுபட் டுள்ளனர்.

SCROLL FOR NEXT