இந்தியா

மோடி அரசின் 10 ஆண்டு கால அநீதி: கறுப்பு அறிக்கை வெளியிட்டது காங்கிரஸ் கட்சி

செய்திப்பிரிவு

புதுடெல்லி: மத்திய அரசின் வெள்ளை அறிக்கைக்கு போட்டியாக, ‘10 ஆண்டு கால அநீதி’ என்ற தலைப்பில் காங்கிரஸ் கட்சி நேற்று கறுப்பு அறிக்கையை வெளியிட்டது.

காங்கிரஸ் தலைமையிலான 10 ஆண்டு கால ஐ.மு. கூட்டணி ஆட்சியில், நாட்டின் பொருளாதாரத்தில் ஏற்பட்ட பாதிப்பு குறித்து மக்களவையில் நேற்று மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் வெள்ளை அறிக்கை தாக்கல் செய்தார். இதற்கு பதிலடி கொடுக்கும் வகையில், ‘10 ஆண்டு கால அநீதி’ என்ற தலைப்பில் காங்கிரஸ் கட்சி நேற்று கறுப்பு அறிக்கை வெளியிட்டது. அதில் கூறப்பட்டிருப்பதாவது: மோடி ஆட்சியில் நாட்டின் பொருளாதாரம் சீரழிந்தது. வேலைவாய்ப்பின்மை அதிகரித்தது. வேளாண் துறை நாசமடைந்தது.பெண்களுக்கு எதிரான குற்றங்களை தூண்டியது. சிறுபான்மையினருக்கு அநீதி இழைக்கப்பட்டது.

சமூக நல்லிணக்கத்துக்கு பாதிப்பு ஏற்பட்டது. தேசிய பாதுகாப்பில் சமரசம் செய்யப்பட்டது. பழங்குடியின பிரிவைச் சேர்ந்தவரை குடியரசுத் தலைவராக்கியது நாங்கள் தான் என பிரதமர் கூறி வருகிறார். நாங்களும் எஸ்.சி சமூகத்தைச் சேர்ந்த கே.ஆர். நாராயணனை குடியரசுத் தலைவராக்கினோம். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

SCROLL FOR NEXT