இந்தியா

விசாரணைக் கைதிகளின் நிலை: உச்ச நீதிமன்றம் உத்தரவு

செய்திப்பிரிவு

ஜிதேந்திர ஜெயின் என்பவர் ‘பைட் ஃபார் ஹியூமன் ரைட்ஸ்' எனும் அமைப்பின் சார்பில் உச்ச நீதிமன்றத்தில் விசாரணைக் கைதி களின் நிலை குறித்து பொதுநல வழக்கு ஒன்றைத் தாக்கல் செய்தார். அதில் சத்தீஸ்கர், மத்தியப் பிரதேசம், ஜார்க்கண்ட மற்றும் மேற்கு வங்கம் போன்ற நக்ஸல் பாதிப்பு மாநிலங்களில் உள்ள சிறைகளில் ஆயிரக்கணக்கான பழங்குடிகள் பல ஆண்டுகளாக விசாரணைக் கைதிகளாகவே இருக்கிறார்கள் என்று குற்றம் சாட்டப்பட்டுள்ளது.

இந்த வழக்கு உச்ச நீதிமன்றத்தில் தலைமை நீதிபதி ஆர்.எம்.லோதா மற்றும் நீதிபதிகள் குரியன் ஜோசப் மற்றும் ஆர்.எஃப்.நரிமன் ஆகியோர் முன்னிலையில் விசாரணைக்கு வந்தது.

அப்போது இதுகுறித்து கருத்து தெரிவித்த நீதிபதிகள், "இது மிக முக்கியமான விஷயம். தற்போது 31,000க்கும் மேற்பட்ட தாழ்த்தப்பட்டவர்கள் மற்றும் பழங்குடியினர் விசாரணைக் கைதிகளாக உள்ளனர். இந்த விஷயத்தில் மத்திய அரசு மாநிலங்களுடன் பேச்சு வார்த்தை நடத்த வேண்டும்" என்று கூறியுள்ளது. மேலும், இன்னும் ஆறு வாரங்களுக்குள் இந்த விஷயம் குறித்து அனைத்து மாநில உள் துறைச் செயலாளர்களின் கூட்டம் நடத்தப்பட வேண்டும் என்றும் அதன் அறிக்கையை கூட்டம் முடிந்து இரண்டு வாரங்களுக்குள் சமர்ப்பிக்க வேண்டும் என்றும் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

SCROLL FOR NEXT