பாட்னா: பாரத ரத்னா விருது அறிவிக் கப்பட்ட பாஜக மூத்த தலைவர் அத்வானிக்கு, பிஹார் முதல்வர் நிதிஷ் குமார் போனில் வாழ்த்து தெரிவித்தார்.
இது குறித்து பிஹார் முதல்வர் அலுவலகம் வெளியிட்ட அறிக்கையில், ‘‘பாஜக மூத்த தலைவர் அத்வானிக்கு பாரத ரத்னா விருது வழங்க மத்திய அரசு முடிவு செய்துள்ளதற்காக, அவரை போனில் தொடர்பு கொண்டு முதல்வர் வாழ்த்து தெரிவித்தார்’’ என தெரிவித்துள்ளது.
அத்வானிக்கு வாழ்த்து தெரிவித்தது குறித்து முதல்வர் நிதிஷ் குமார் கூறியதாவது:
நாட்டில் மிகவும் மதிக்கப்படும் தலைவர் அத்வானி. நாட்டின் வளர்ச்சிக்கு அவரின் பங்களிப்பு மறக்க முடியாதது. ஊக்குவிப்பை அளிக்கக்கூடியது. வாஜ்பாய் பிரதமராக இருந்தபோது, மத்திய அமைச்சரவையில் அவருடன் இணைந்து பணியாற்றும் வாய்ப்பை நான் பெற்றேன். அவரிடம் இருந்து நான் நிறைய விஷயங்களை கற்றுக்கொண்டேன்.
இவ்வாறு நிதிஷ் குமார் கூறியுள்ளார்.