இந்தியா

கன்னட பெயர் பலகை - அவசர சட்டத்தை நிராகரித்த கர்நாடக ஆளுநர் தாவர்சந்த்

இரா.வினோத்

பெங்களூரு: கர்நாடகாவில் கன்னட ரக் ஷனவேதிகே அமைப்பினர், கன்னடத்தில் பெயர் பலகை வைக்காத வர்த்தக நிறுவனங்களின் பெயர்ப்பலகைகளை அடித்து நொறுக்கினர்.

இதையடுத்து கர்நாடக அரசுகடந்த 5-ம் தேதி வணிக நிறுவனங்களின் பெயர் பலகைகளில் 60 சதவீதம் கட்டாயம் கன்னடத்தில் எழுதி இருக்க வேண்டும் என அவசரச் சட்டம் கொண்டுவந்தது. மேலும், பிப்ரவரி 28‍-ம் தேதிக்குள் கன்னடத்தில் பெயர் பலகை வைக்காத நிறுவனங்களுக்கு அபராதம் விதிக்கப்படும் எனவும் உத்தரவிட்டது. கர்நாடக அரசு கொண்டு வந்த அவசரச் சட்ட மசோதாவுக்கு அமைச்சரவை கூட்டத்தில் ஒப்புதல்பெறப்பட்ட‌து.

இந்த அவசர சட்டத்துக்கு ஒப்புதல் தராமல் ஆளுநர் தாவர்சந்த் கெலாட் நிராகரித்துள்ளார். மேலும் இதை சட்டப்பேரவையில் நிறைவேற்றுமாறு திருப்பி அனுப்பியுள்ளார். இதற்கு காங்கிரஸாரும், கன்னட அமைப்பினரும் கண்டனம் தெரிவித்துள்ளனர்.

இதுகுறித்து கர்நாடக துணை முதல்வர் டி.கே. சிவகுமார் கூறுகையில், “கர்நாடகாவின் முதன்மையான பிரச்சினையை புரிந்துக் கொள்ளாமல் ஆளுநர் தவறான முடிவை எடுத்துள்ளார். இந்தப் பிரச்சினை கர்நாடகாவின் க‌வுரவம் சார்ந்தது என்பதால் ஆளுநர் தன‌து முடிவை மறுபரிசீலனை செய்ய வேண்டும்” என்றார்.

SCROLL FOR NEXT