பெண்களுக்கு எதிரான வன்முறை யைத் தூண்டும் திரைப்படங்கள், தொலைக்காட்சித் தொடர்களை தடை செய்ய நடவடிக்கை எடுக்கப்படும் என்று தெலங்கானா முதல்வர் கே. சந்திர சேகர் ராவ் எச்சரித்துள்ளார்.
தெலங்கானா, ஆந்திராவின் கூட்டுத் தலைநகரான ஹைதரா பாதில் பெண்களுக்கு எதிரான வன்முறைச் சம்பவங்கள் அதி கரித்து வருகின்றன. அண்மையில் ஹைதராபாதின் புறநகர்ப் பகுதியில் இளம்பெண்ணை கட்டிப் போட்டு ஒரு கும்பல் பலாத்காரம் செய்தது.
இந்த சம்பவத்தைத் தொடர்ந்து தெலங்கானா முதல்வர் கே. சந்திர சேகர ராவ், மாநில போலீஸ் டி.ஜி.பி அனுராக் ஷர்மா உள்ளிட்ட உயரதிகாரிகளுடன் ைஹதராபாத் சட்டம்-ஒழுங்கு நிலவரம் குறித்து ஆலோசனை நடத்தினார்.
அப்போது திரைப்படங்கள், தொலைக்காட்சி தொடர்களில் பெண்களுக்கு எதிரான வன்முறை யைத் தூண்டும் வகையில் காட்சிகள் ஒளிபரப்பாவதால் நகர்ப்புறங்களில் வன்முறை அதிக மாவதாகவும் பெண் சிசுக்கொலை அதிகரிப்பதாகவும் முதல்வர் கே.சந்திரசேகர ராவ் கருத்து தெரிவித்தார்.
இதுபோன்ற திரைப்படம், தொலைக்காட்சித் தொடர்களை தடைசெய்யும் வகையில் கடும் நடவடிக்கைகளை எடுக்கும்படி அவர் உத்தரவிட்டார்.
அனைத்து துணை வட்டார போலீஸ் அலுவலகத்திலும் ஒரு மகளிர் காவல் நிலையம் அமைக்க வேண்டும் என்றும் அவர் அறிவுறுத்தினார்.