பிரதமர் நரேந்திர மோடி இரண்டு நாள் பயணமாக நாளை நேபாளம் செல்கிறார். நரேந்திர மோடியின் நேபாள சுற்றுப் பயணத்தை முன்னிட்டு, அந்நாட்டில், வரலாறு காணாத பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.
பிரதமர் நரேந்திர மோடி வரும் ஞாயிற்றுகிழமையன்று நேபாள நாட்டில் சுற்றுப்பயணம் மேற்கொள்ள உள்ளார். இரண்டு நாள் சுற்றுப்பயணத்தில் ஒரு பகுதியாக, நேபாளத்தில் உள்ள 5-ஆம் நூற்றாண்டு கால பழமை வாய்ந்த பசுபதிநாத் கோவிலில் பிரார்த்தனை மேற்கொள்ள உள்ளார்.
பின்னர் நேபாள தலைநகர் காத்மாண்டுவில் உள்ள நாடாளுமன்ற வளாகத்தில் நடைபெறும் கூட்டு கூட்டதில் கலந்து கொள்கிறார். அப்போது, நரேந்திர மோடி, இந்தியா நேபாளுத்துக்கு வழங்கும் நிதியுதவிக் குறித்து அறிவிப்பார் என்று எதிர்ப்பார்க்கப்படுகிறது.
மேலும், இந்திய.நேபாள் இரு நாட்டு நல்லுறவு மேம்பாடு, நிதி சிக்கல்கள் குறித்து அந்நாட்டு பிரதமருடன் மோடி ஆலோசிப்பார் என்றும் தெரிய வருகிறது.
மோடி பதவியேற்ற பின்னர் இரண்டாவது முறையாக அண்டை நாடு ஒன்றிற்கு வெளிநாடு பயணம் மேற்கொள்கிறார்.
பிரதமர் மோடியுடன் பல்வேறு துறைகளை சேர்ந்த அதிகாரிகள் சுமார் 101 பேர் கலந்து கொள்கின்றனர். கடந்த 1997-ம் ஆண்டு அப்போதைய பிரதமராக இருந்த ஐ.கே.குஜ்ரால் நேபாள நாட்டிற்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டார். அவரைத் தொடர்ந்து 17 ஆண்டுகளுக்கு பின்னர், இந்திய பிரதமரான மோடி நோபாளம் செல்கிறார் என்பது குறிப்பபிடத்தக்கது.