மனோஜ் ஜாரங்கே பாட்டீல் 
இந்தியா

மராத்தியர் கோரிக்கை ஏற்பு: மனோஜ் பாட்டீல் உண்ணாவிரதம் நிறைவு

செய்திப்பிரிவு

நவிமும்பை: கல்வி மற்றும் வேலை வாய்ப்பில் மராத்தியர்களுக்கான இடஒதுக்கீடு செல்லாது என உச்சநீதிமன்றம் கடந்த 2021-ம் ஆண்டுதீர்ப்பளித்தது. இதையடுத்து மகாராஷ்டிர அரசு மராத்தியர்களின் இட ஒதுக்கீடு பிரச்சினைக்கு தீர்வு காணும் வகையில் அவசர சட்டம் ஒன்றை கொண்டு வந்தது.

இந்நிலையில் மராத்தியர்களில் குனாபி சமூகத்தினரை சேர்ந்த 54 லட்சம் பேருக்கு குன்பி சான்றிதழ் வழங்க கோரி மனோஜ் ஜாரங்கே பாட்டீல் என்பவர் நேற்று முன்தினம் உண்ணாவிரத போராட்டத்தை தொடங்கினார். அரசு தங்கள் கோரிக்கையை ஏற்காவிட்டால், மும்பை நோக்கிநேற்று காலை பேரணி நடத்துவோம் என கூறியிருந்தார்.

மேலும் மராத்தியர்கள் இட ஒதுக்கீடு போராட்டம் தொடர்பாக காவல்துறையினர் பதிவு செய்த வழக்குகளை மகாராஷ்டிர அரசு ரத்து செய்ய வேண்டும் எனவும் கூறியிருந்தார்.

இதையடுத்து அவரது கோரிக் கைகளை ஏற்பதாக முதல்வர் ஏக்நாத் ஷிண்டே கூறினார்.

இதையடுத்து மனோஜ் பாட்டீல் நேற்று அளித்த பேட்டியில், ‘‘எங்களது கோரிக்கைகள் ஏற்றுக் கொள்ளப்பட்டன. இதற்கான கடிதத்தை முதல்வர் ஏக்நாத் ஷிண்டேவிடம் இருந்து பெறுவோம். முதல்வர் கையில் பழரசம் அருந்தி நான் எனது போராட்டத்தை முடித்துக் கொள்கிறேன்’’ என்றார்.

SCROLL FOR NEXT