இந்தியா

கார்த்திக் என்னை கைவிடுவார் என கனவிலும் நினைக்கவில்லை: மத்திய அமைச்சரின் மகன் குறித்து நடிகை மைத்ரி பேட்டி

இரா.வினோத்

ரயில்வே அமைச்சர் சதானந்த கவுடாவின் மகன் கார்த்திக் என்னை கைவிடுவார் என கனவிலும் நினைக்கவில்லை என்று நடிகை மைத்ரி கூறினார்.

கார்த்திக் தன்னை திருமணம் செய்துகொள்வதாக கூறி பலாத்காரம் செய்ததாக நடிகை மைத்ரி பரபரப்பு புகார் அளித்தார். இந்தப் புகாரால் சதானந்த கவுடாவின் பதவிக்கு ஆபத்து ஏற்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.

இந்நிலையில் மைத்ரி வெள்ளிக்கிழமை ‘தி இந்து’விடம் கூறியதாவது:

நானும் கார்த்திக்கும் கடந்த மே 8-ம் தேதி தான் முதல் முறையாக சந்தித்தோம்.என்னுடைய நண்பர் குஷால் அறிமுகப்படுத்தினார். முதல் சந்திப்பிலேயே என்னிடம் தொலைபேசி எண்ணை வாங்கிக் கொண்டார். அதன் பிறகு ராத்திரி பகலாக‌ பேசிப்பேசி காத‌லர்களாக ஆனோம். அவரை கண்மூடித் தனமாக நம்பினேன். எனது அம்மா, தங்கை பேச்சை மீறி, அவரை காதலித்தேன்.

என்னை உயிருக்கு உயிராக காதலித்ததால் மைசூர், மங்களூர் என பல இடங்களுக்கு அவருடன் சென்றேன். ஒரே அறையில் தங்கினோம். என்னை கல்யாணம் செய்து கொள்வதாக கூறி, மங்க ளூரில் அவரது பண்ணை வீட்டில் பலாத்காரம் செய்தார்.

பிறகு நான் கொடுத்த நெருக்கடி காரணமாக‌ ஜூன் 5-ம் தேதி நண்பர்கள் முன்னிலையில் திருமணம் செய்துகொண்டார்.

அதன் பிறகு நெருங்கிய நண்பர்க ளுக்கு மட்டும் பார்ட்டி கொடுத்தார். அப்போது எல்லாரிடமும் என்னை, ‘மனைவி'என்றே அறிமுகப்படுத் தினார். கூடிய சீக்கிரம் அப்பாவிடம் எடுத்து சொல்லி கல்யாணம் செய்துகொள்கிறேன் என சத்தியம் செய்துகொடுத்தார். இதனிடையே திடீரென ஒருநாள் ‘‘நம்முடைய காதல் வீட்டுக்கு தெரிந்துவிட்டது. வீட்டில் பெரிய பிரச்சினை. இனிமேல் நாம் அடிக்கடி சந்திக்க வேண்டாம், பேச வேண்டாம்’’ எனக்கூறி தொலை பேசியை துண்டித்தார்.

கடந்த 5-ம் தேதி தொலை பேசியில் தொடர்புகொண்டு உன்னுடைய ஃபேஸ்புக் பக்கத்தில் நாமிருவரும் சேர்ந்திருக்கும் படங்களை அழித்துவிடு என்றார். மேலும் ஃபேஸ்புக் பக்கத்தை கொஞ்ச நாட்களுக்கு முடக்கி வைக்குமாறு கூறினார்.நானும் அவ்வாறே செய்தேன். கார்த்திக் என்னை கைவிடுவார் என கனவிலும் நான் நினைத்து பார்த்ததில்லை.

அவருடைய அம்மாவிடமும், “என்னை மருமகளாக ஏற்றுக் கொள்ளும்படி கெஞ்சினேன்.அதற்கு அவர், “உன்னால் முடிந்ததை பார்த்துக்கொள்' என்றார். பிறகு தான் மீடியாக்களிடம் வந்தேன்.

இவ்வாறு மைத்ரி கூறினார்.

தொடர்ந்து நடிகை மைத்ரி பேசுகையில், ‘‘கார்த்திக்கும், அவருடைய அம்மாவும் என்னை அசிங்கமாக பேசிய பேச்சைக்கேட்டு ஒரு நாள் ராத்தியில் தற்கொலைக்கு கூட முயற்சித்தேன்.ஆனால் இப்போது என்னை விட்டு வேறு ஒரு பெண்ணுடன் கல்யாணம் செய்துகொள்ள கார்த்திக் திட்டமிட்டிருக்கிறார். நான் போலீ ஸிடம் புகார் அளிக்கப் போவதாக கார்த்திக்கின் நண்பரிடம் சொன்னேன்.

என்னுடைய காதல் உண்மை யானது.அதற்கு அரசியல் சாயம் பூச விரும்பவில்லை.கார்த்திக்கிடம் காதலைத் தவிர‌ சொத்து,பணம்,செல்வாக்கு எதையும் எதிர்பார்க்கவில்லை.அவர் என்னை காயப்படுத்தி னாம், அவரை காதலித்துக் கொண்டே இருப்பேன்.அதிகாரத்தில் இருப்பவர்கள் என்னைப் போன்ற அபலை பெண்களை ஏமாற்றுவது பெரும் பாவம்.தங்களுடைய தவறுக்கு மனம் வருந்த வேண்டும்.மனம் வருந்தாதவர்கள் கண்டிப்பாக தண்டனை பெற வேண்டும்.

என்னுடைய கோரிக்கை கார்த்திக் உடன் சேர்ந்து வாழ வேண்டும் என்பது மட்டும்தான்.ஆனால் அதற்கு முன்னதாக என்னை கொன்று விடுவதாக சிலர் மிரட்டுகின்றனர்.எனவேதான் வீட்டை விட்டு மறைந்து இருக்கிறேன்.இந்த விஷயத்தில் கர்நாடக முதல்வர் சித்தராமய்யாவும்,பிரதமர் நரேந்திர மோடியும் தலையிட்டு என்னை கார்த்திக் உடன் சேர்த்து வைப்பார்கள் என நம்புகிறேன்.என்னுடைய உயிரே போனாலும் கார்த்திக் வேறொரு பெண்ணை கல்யாணம் செய்து கொள்ள விட மாட்டேன். அதற்காக சட்டரீதியாக அனைத்து நடவடிக்கைகளிலும் ஈடுபடுவேன். இவ்வாறு மைத்ரி கூறினார்.

கார்த்திக்குடன் இருக்கும் புகைப்படங்கள், வீடியோ, ஆடியோ பதிவுகள் என பலவற்றை அவர் ஆதாரங்களாக காட்டினார்.

போலீஸார் தீவிர தேடுதல் வேட்டை

நடிகை மைத்ரி அளித்த பாலியல் பலாத்கார புகாரின் அடிப்படையில், ரயில்வே அமைச்சர் சதானந்த கவுடாவின் மகன் கார்த்திக்கை கைது செய்ய பெங்களூர் போலீஸார் திட்டமிட்டுள்ளனர். இதற்காக அவருக்கு சம்மன் அனுப்பி,தீவிர தேடுதல் வேட்டையில் ஈடுபட்டுள்ளனர். இதனிடையே எதிர்க்கட்சிகளும், மகளிர் அமைப்பு களும் சதானந்த கவுடாவுக்கு எதிராக‌ போர்க்கொடி தூக்கி, போராட்டத்தில் குதித்துள்ளன.பாஜக மேலிடம் இந்த விவகாரத்தில் விளக்கம் கேட்டிருப்பதால் கர்நாடக அரசியலில் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

கார்த்திக் மீது நடிகை மைத்ரி பெங்களூர் ஆர்.டி.நகர் காவல் நிலையத்தில் கடந்த புதன்கிழமை புகார் அளித்தார். இதன் அடிப்படையில் கார்த்திக் மீது இந்திய தண்டனை சட்டம் 376, 420, 406 ஆகிய பிரிவுகளின் கீழ் பாலியல் ப‌லாத்காரம், மோசடி செய்தது, குற்றத்தை மறைக்க முயன்றது ஆகிய குற்றங்களுக்காக போலீஸார் வழக்கு பதிவு செய்தனர்.

SCROLL FOR NEXT