இமாச்சலப் பிரதேசத்தில் இப்போது லாபகரமாக உள்ளது தக்காளி சாகுபடி. ஆப்பிளில் கிடைப்பதை விட கூடுதல் விலை கிடைப்பதால் தக்காளி சாகுபடிக்கு மாறுகின்றனர் குலு தோட்டப்பயிர் விவசாயிகள்.
மொத்த விலைச் சந்தைகளில் தக்காளி கிலோ ரூ. 40 முதல் 45 வரை விலைபோகிறது. ஆப்பிளோ தரத்துக்கு ஏற்ப கிலோ ரூ. 30-50 விலையில் விற்கப்படுகிறது. 25 கிலோ தக்காளிக்கு இதுவரை ரூ. 250 வரை விலை பெற்ற விவசாயி தற்போது ரூ. 1100 வரை பணம் பார்க்கிறார். எனவே தக்காளி பயிரிடாத விவசாயிகள் நாம் ஏமாந்துவிட்டோம் என வருத்தப்படுகின்றனர்.
தேவை அதிகரித்துள்ளதும் குறைந்த விளைச்சலுமே தக்காளி விலை ஏற்றத்துக்கு காரணம் என்கிறார் மணாலி காய்கறி சந்தை தலைவர் பூதி பிரகாஷ்.