இந்தியா

சிசாட் நுழைவுத் தேர்வை நீக்க முடியாது: பாஜக ஆட்சிமன்றக் குழு முடிவு

செய்திப்பிரிவு

யூ.பி.எஸ்.சி. சிசாட் நுழைவுத் தேர்வை நீக்க வேண்டும் என எழுந்துள்ள கோரிக்கையை பாஜக நிராகரித்துள்ளது. இது குறித்து செவ்வாய்கிழமை காலை கூடிய அக்கட்சியின் ஆட்சிமன்ற குழுவில் இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளதாகக் கூறப்படுகிறது.

பிரதமர் நரேந்திர மோடியும் கலந்து கொண்ட இந்தக் கூட்டம் குறித்து ‘தி இந்து’விடம் பாஜக தேசிய நிர்வாகிகள் கூறியதாவது:

இந்த விவகாரத்தில் மிகக் குறைந்த நேரத்தில் சரியான முடிவை மத்திய அரசு அறிவித்துள் ளதாக மூத்த தலைவர் வெங்கய்யா நாயுடு கூட்டத்தில் தெரிவித்தார். இதனை பிரதமர் உட்பட அனைவரும் ஆமோதித்தனர்.

மூன்று பேர் கொண்ட சிறப்புக் குழு அளித்த அறிக்கையை ஆதரிக்கும் வகையில், சிசாட் தேர்வை நீக்க முடியாது என்று உறுதியான முடிவு எடுக்கப்பட்டுள்ளது’ எனத் தெரிவித்தனர்.

எனினும், 2011-ல் செய்த மாற்றத் துக்கு தற்போது திடீர் என கிளம்பி இருக்கும் போராட்டத்தின் பின்னணி யில் அரசியல் இருக்கலாம் என பாஜக ஆட்சிமன்ற குழு சந்தேகிப்பதாகக் கூறப்படுகிறது.

SCROLL FOR NEXT