இந்தியா

நேபாளத்தில் மோடிக்கு எளிமையான சைவ உணவு

செய்திப்பிரிவு

நேபாளத்தில் இரண்டு நாள் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள இந்தியப் பிரதமர் நரேந்திர மோடி, அங்கு இந்தியர் ஒருவர் தயாரித்த மிகவும் எளிமையான சைவ உணவையே உட்கொண்டார்.

“ரொட்டி, பருப்பு மற்றும் காய்கறிகள் போன்ற எளிமையான சைவ உணவையே விரும்பி எடுத்துக்கொள்கிறார்” என்று ஒரு சமையல்காரர் பிடிஐ செய்தியாளரிடம் தெரிவித்தார்.

காலை உணவின்போது மசாலா தேநீரும், எலுமிச்சைச் சாறும் எடுத்துக்கொண்டார். தேவையான பழங்கள், காய்கறிகள் அனைத்துமே நேபாளத்திலேயே கிடைக்கின்றன.

ஞாயிற்றுக்கிழமை மாலை இந்தியத் தூதர் ரஞ்சித் ரே அளிக்கும் வரவேற்பு விழாவில் கலந்து கொள்கிறார். அதன் பிறகு, அந்நாட்டுப் பிரதமர் சுஷீல் கொய்ராலா ஐந்து நட்சத்திர உணவு விடுதியில் அளிக்கும் இரவு விருந்தில் கலந்துகொள்கிறார்.

SCROLL FOR NEXT