இந்தியா

மோடியின் சுதந்திர தின உரை: இடதுசாரிகள் கடும் விமர்சனம்

செய்திப்பிரிவு

பிரதமர் நரேந்திர மோடியின் சுதந் திர தின உரையை இடதுசாரி கட்சி கள் கடுமையாக விமர்சித்துள்ளன.

திட்டக்குழுவை அகற்றும் அரசு மீது கேள்வி எழுப்பி மார்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியும், மக்கள் முன்னேற்றத்துக்கான அறிவிப்புகள் எதுவும் இல்லை என்று இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சியும் கூறியுள்ளன.

இது குறித்து ‘தி இந்து’விடம் இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் தேசிய செயலாளர் டி.ராஜா கூறும்போது, “நாட்டின் ஏழ்மை பற்றி பேசிய மோடி, மக்களின் முன்னேற்றத்துக்கான திட்டங்கள் எதுவும் அறிவிக்கவில்லை. பள்ளி கள், பெண்களுக்கு கழிவறை, பெண்கள் பாதுகாப்பு போன்ற சில நல்ல விஷயங்களை பேசியிருந் தாலும் அவரது கொள்கைகளில் ஒன்றான அந்நிய முதலீட்டை ஊக்குவிப்பதில் தனி ஆர்வம் காட்டுகிறார்.

தனியார் மற்றும் பொதுமக்க ளின் கூட்டு என அவர் கூறியிருப்பது தனியார்மயமாக்கலை காட்டு கிறது. இதில் காங்கிரஸ் துணைத் தலைவர் ராகுல் ஏற்கெனவே கூறிய தற்கும் மோடிக்கும் இடையே வித்தியாசம் எதுவுமில்லை” என்றார் அவர்.

பிரதமர் மோடி தனது சுதந்திர தின உரையில், 64 ஆண்டுகால திட்டக்குழுவை கலைக்க முடிவு செய்திருப்பதாகவும், இதற்கு மாற் றாக புதிய அமைப்பை அமைக்க விருப்பதாகவும் கூறினார்.

இதுகுறித்து மார்க்சிஸ்ட் கட்சி யின் நிலைக்குழு உறுப்பினர் சீத்தா ராம் யெச்சூரி கூறும்போது, “எந்த வொரு திட்டம் பற்றி பேசுவதற்கும் அதை செயல்படுத்துவதற்கும் பல வேறுபாடுகள் உள்ளன. அரசு திட்டங்களை வகுத்து தருவது திட்டக்குழு. இதை கலைத்து விட்டால் திட்டங்களை வகுப்பது யார்? வகுக்கப்பட்டதை கண்காணிப்பது யார்?” என்றார்.

SCROLL FOR NEXT