இந்தியா

அயோத்தி ராமர் கோயில் கும்பாபிஷேகத்துக்கு 1 லட்சம் லட்டு அனுப்புகிறது திருப்பதி தேவஸ்தானம்: நிர்வாக அதிகாரி தகவல்

செய்திப்பிரிவு

திருமலை: அயோத்தி ராமர் கோயில் கும்பாபிஷேகம் அன்று பக்தர்களுக்கு பிரசாதமாக வழங்க 1 லட்சம் லட்டுக்களை திருப்பதி தேவஸ்தானம் அனுப்புகிறது.

திருமலை திருப்பதி தேவஸ்தான அதிகாரி தர்மா ரெட்டிக்கு, பக்தர்கள் போன் செய்து கலந்துரையாடும் நிகழ்ச்சியில் அவர் கூறியதாவது:

திருப்பதிக்கு வரும் பக்தர்கள் ஆர்ஜித சேவை உட்பட அனைத்து சேவைகள், நன்கொடைகள், தரிசனம், அறைகள் முன்பதிவு ஆகியவற்றுக்கு ttdevasthanams.ap.gov.in என்ற இணையளத்தை மட்டுமே பயன்படுத்த வேண்டும்.

அயோத்தி ராமர் கோயிலில் ராமர் சிலை பிரதிஷ்டை விழாவின் போது பக்தர்களுக்கு பிரசாதமாக வழங்க 25 கிராம் எடையில் ஒரு லட்சம் லட்டுக்களை வழங்கதிருப்பதி தேவஸ்தானம் ஒப்புக்கொண்டுள்ளது

இவ்வாறு தர்மா ரெட்டி தெரிவித்தார்.

SCROLL FOR NEXT