இந்தியா

ஆழ்துளை கிணற்றில் விழுந்த சிறுவன் பலி?

செய்திப்பிரிவு

கர்நாடகாவில் கடந்த ஞாயிற்றுக் கிழமை ஆழ்துளை கிணற்றில் விழுந்த சிறுவன் இறந்திருக்கலாம் என மருத்துவ அதிகாரி தெரிவித்துள்ளார்.

கர்நாடக மாநிலம் பாகல் கோட்டை மாவட்டத்தில் உள்ள‌ சுலிகேரி கிராமத்தை சேர்ந்த ஹ‌னுமந்தப்பா ஹ‌ட்டி(34).இவரின் 6 வயது மகன் திம்மண்ணா,கடந்த ஞாயிற்றுக்கிழமை 350 அடி ஆழமுள்ள‌ ஆழ்துளை கிணற்றில் தவறி விழுந்தான். கடந்த 5 நாள்களாக சிறுவனை மீட்க முடியவில்லை.

பாகல்கோட்டை மாவட்ட மருத்துவ அதிகாரி பி.டி.கித்தூர் கூறும்போது, “உணவு,நீர்,காற்று என எதுவும் இல்லாமல் அவ்வளவு ஆழத்தில் உயிரோடிருப்பது கடினமானது. துர்நாற்றம் வீச ஆரம்பித்திருப்பதனால் சிறுவன் இறந்திருக்க வாய்ப்பிருக்கிறது.''என தெரிவித்தார்.

SCROLL FOR NEXT