இந்தியா

மகாராஷ்டிராவில் தாவூத் வீடு உட்பட 3 சொத்துகள் ஏலம்

செய்திப்பிரிவு

மும்பை: மும்பையில் 1993-ம் ஆண்டு மார்ச் மாதம் நடைபெற்ற தொடர் குண்டுவெடிப்பில் முக்கியப் புள்ளியாக இருந்தவர் தாவூத் இப்ராஹிம். அந்தத் தொடர் குண்டு வெடிப்பில் 257 பேர் உயிரிழந்தனர், இந்த சம்பவத்துக்குப் பிறகு வெளிநாடு தப்பியோடி தலைமறைவானார்.

இதைத் தொடர்ந்து, இந்தியாவில் தாவூத் இப்ராஹி முக்குச் சொந்தமான 11 சொத்துகள் ஏலம் விடப்பட்டன. இந்நிலையில், ஏற்கெனவே தாவூத் இப்ராஹிம் சிறு வயதில் வசித்து வந்த வீடு உட்பட 3 சொத்துகள் வரும் 5-ம் தேதி ஏலம் விடப்பட உள்ளன.

SCROLL FOR NEXT