இந்தியா

மாநில அரசுகள் கரோனா பரிசோதனையை அதிகப்படுத்த உத்தரவு

செய்திப்பிரிவு

ராமேசுவரம்: கரோனா பரிசோதனை எண்ணிக்கையை அதிகப்படுத்த மாநில அரசுகளுக்கு உத்தரவிடப்பட்டுள்ளதாக, மத்திய சுகாதாரத் துறை இணை அமைச்சர் எஸ்.பி. சிங் தெரிவித்தார்.

ராமேசுவரத்தில் நேற்று நடைபெற்ற ஆயுஷ்மான் பாரத் திட்டம் தொடர்பான ஆலோசனைக் கூட்டத்துக்கு பிறகு, அவர் செய்தியாளர்களிடம் கூறியதாவது: தமிழக அரசின் சுகாதாரத் துறை சிறப்பாகச் செயல்பட்டு வருகிறது. கரோனா, ஜேஎன்-1 திரிபு வைரஸ் பரவல் தொடர்பாக மத்திய அரசு உன்னிப்பாக கவனித்து வருகிறது. தற்போது வரை மிகவும் குறைவான தொற்று பரவல் மட்டுமே உள்ளதால் பொதுமக்கள் அச்சமடைய தேவையில்லை.

மத்திய அரசின் வழிகாட்டு நெறிமுறைகளை பின்பற்றி மாநில அரசு பரிசோதனை எண்ணிக்கையை அதிகப்படுத்த உத்தரவிடப்பட்டுள்ளது. வழிமுறைகளைப் பின்பற்றினால் நிச்சயம் தொற்று பரவலை முன்கூட்டியே தடுக்க முடியும் என்றார்.

SCROLL FOR NEXT