இந்தியா

காஷ்மீரில் 9,000 இளைஞர்களுக்கு பொது மன்னிப்பு

செய்திப்பிரிவு

காஷ்மீரில் 9 ஆயிரம் இளைஞர்களுக்கு பொது மன்னிப்பு அளிக்கப்பட்டுள்ளதாக மாநில முதல்வர் மெகபூபா முப்தி தெரிவித்துள்ளார்.

இதுகுறித்து மெகபூபா முப்தி தனது ட்விட்டர் பதிவில், ‘‘2016-ம் ஆண்டு ஏற்பட்ட பதற்றமான சூழலின்போது பல்வேறு வழக்குகளில் தொடர்புடைய 4,327 இளைஞர்கள் மீதான வழக்குகளை வாபஸ் பெற உத்தர விட்டுள்ளேன். காஷ்மீரில் அமைதியை மீண்டும் கொண்டுவர 9 ஆயிரத்துக்கும் மேற்பட்ட இளைஞர்களுக்கு பொது மன்னிப்பு அளிக்கப்பட்டுள்ளது. சமரசம், மறுவாழ்வுப் பணிகள்தான் முன்னேற்றத்துக்கான ஒரே வழி. அரசியலமைப்பு சட்டத்தில் நம்பிக்கை வைக்காவிட்டால் மாநிலத்தின் வளர்ச்சி தடைபடும்’’ என்று கூறியுள்ளார்.

SCROLL FOR NEXT