குடியரசுத் தலைவர் திரவுபதி முர்மு 
இந்தியா

3 புதிய குற்றவியல் தடுப்பு சட்டங்களுக்கு குடியரசுத் தலைவர் திரவுபதி முர்மு ஒப்புதல்!

செய்திப்பிரிவு

புதுடெல்லி: பழைய குற்றவியல் சட்டங்களை மறுசீரமைக்கும் விதமாக மத்திய அரசு புதிதாக கொண்டு வந்த மூன்று குற்றவியல் சட்ட மசோதாக்களும் மக்களவையில் அண்மையில் நிறைவேற்றப்பட்டது. இதற்கு குடியரசுத் தலைவர் திரவுபதி முர்மு தற்போது ஒப்புதல் அளித்துள்ளார்.

பாரதிய நியாய சன்ஹிதா, பாரதிய நாகரிக் சுரக்‌ஷா சன்ஹிதா, பாரதிய சாக்‌ஷியா ஆகிய 3 மசோதாக்களையும் மக்களவையில் மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா கடந்த 12-ம் தேதி அறிமுகம் செய்தார். இதன் மீதான விவாதம் மக்களவையில் கடந்த வாரம் நடந்தது. தொடர்ந்து குரல் வாக்கெடுப்பு மூலம் நிறைவேற்றப்பட்டது.

மக்களவையில் நிறைவேற்றப்பட்ட இந்த 3 புதிய குற்றவியல் தடுப்பு சட்டங்களுக்கு குடியரசுத் தலைவர் திரவுபதி முர்மு ஒப்புதல் அளித்துள்ளார்.

SCROLL FOR NEXT