இந்தியா

கேரளாவில் 1000-ஐ கடந்த கரோனா பாதிப்பு: வயதானவர்களுக்கு அரசு எச்சரிக்கை

செய்திப்பிரிவு

திருவனந்தபுரம்: நாட்டிலேயே அதிக அளவாக கேரளாவில் கடந்த சில தினங்களாக கரோனா தொற்றால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது.

கேரளாவில் நேற்று முன்தினம் ஒரே நாளில் 346 பேர் கரோனால் பாதிக்கப்பட்டனர். மாநிலம் முழுவதும் 1,324 பேர் கரோனாவால் பாதிக்கப்பட்டு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர். கரோனா பரிசோதனை அதிக அளவில் நடத்தப்படுவதால் பாதிப்பு அதிகரித்துள்ளதாக அதிகாரிகள் கூறினர்.

இதனிடையே, கரோனாவால் பாதிக்கப்பட்ட கோழிக்கோட்டைச் சேர்ந்த குமரன் (77) கண்ணூர் மாவட்டத்தைச் சேர்ந்த அப்துல்லா ஆகியோர் சிகிச்சை பலனின்றி இறந்தனர். அவர்கள் இறப்புக்கு வயது முதிர்வு மற்றும் இணைநோய்கள் காரணம் என்றும், வயதானவர்கள் மற்றும் கர்ப்பிணிப் பெண்கள் எச்சரிக்கையாக இருக்க வேண்டும் என்று மாநில சுகாதாரத் துறை எச்சரித்துள்ளது.

SCROLL FOR NEXT