சோதனை நடந்த தீரஜ் குமார் சாகுவின் வீடு 
இந்தியா

“மணி ஹெய்ஸ்ட்... இது கதையல்ல!” - காங்கிரஸை கலாய்த்த பிரதமர் மோடி

செய்திப்பிரிவு

புதுடெல்லி: காங்கிரஸ் எம்.பி வீட்டில் கத்தை கத்தையாகக் கோடிக் கணக்கில் பணம் பறிமுதல் செய்யப்பட்டதைச் சுட்டிக்காட்டி பாஜக தமது சமூக வலைதளப் பக்கத்தில் பகிர்ந்த வீடியோவை ரீட்வீட் செய்துள்ள பிரதமர் நரேந்திர மோடி, அதைவைத்து பகடி செய்துள்ளார். அதில் அவர், "இந்தியாவில் மணி ஹெய்ஸ்ட் புனைவுக் கதையெல்லாம் தேவையில்லை. இங்கே காங்கிரஸ் கட்சி இருக்கிறது. அவர்கள் 70 ஆண்டுகளாக கொள்ளையடித்த வரலாறு கொண்டவர்கள். ஊழல் பணத்தை எண்ணும் பணி இன்னும்தான் தொடர்கிறது" என்று பதிவிட்டுள்ளார்.

முன்னதாக, காங்கிரஸ் கட்சியைச் சேர்ந்த மாநிலங்களவை எம்.பி தீரஜ் குமார் சாகு வீட்டில் பல கோடி ரூபாய் பணம் பறிமுதல் செய்யப்பட்டது. தீரஜ் தொடர்புடைய பால்டியோ சாகு குழுமத்துக்கு மேற்கு ஒடிசாவில் பவுத் டிஸ்டிலெரி என்ற மதுபான ஆலை உள்ளது. மிகப் பெரியளவில் மதுபானங்களை உற்பத்தி செய்வதில் இந்நிறுவனமும் ஒன்று. பால்டியோ சாகு குழுமத்தினர் வரி ஏய்ப்பு செய்வதாக கிடைத்த தகவலை அடுத்து, ஒடிசாவின் சம்பல்பூர், ரூர்கேலா, பொலாங்கிர், சுந்தர்கர் மற்றும் புவனேஸ்வரில் இந்த குழுமத்துக்கு சொந்தமான இடங்களிலும், ஜார்க்கண்ட்டில் எம்.பி. தீரஜ்குமாருக்கு சொந்தமான இடங்களிலும், மேற்கு வங்கத்தில் உள்ள அலுவலகங்களிலும் வருமானவரித்துறை அதிகாரிகள் சோதனை நடத்தினர், அதில் 353 கோடி ரூபாய் பறிமுதல் செய்யப்பட்டது. இதனை சுட்டிக்காட்டியே பாஜக கிண்டல் வீடியோ வெளியிட்டுள்ளது. அந்த வீடியோவுக்கான இணைப்பு:

SCROLL FOR NEXT