புதுடெல்லி: திரிணமூல் காங்கிரஸ் சார்பில்மேற்கு வங்கத்தின் கிருஷ்ணாநகர் தொகுதியில் இருந்து மக்களவைக்கு தேர்வு செய்யப்பட்டவர் மஹுவா மொய்த்ரா. இவர் அதானிகுழுமத்திற்கு எதிராக மக்களவையில் 50 கேள்விகளை எழுப்பினார்.
இந்த கேள்விகளை எழுப்பரியல் எஸ்டேட் தொழிலதிபர்தர்ஷன் ஹிரா நந்தானியிடம்இருந்து பல கோடி ரூபாய் லஞ்சம்பெற்றதாக குற்றச்சாட்டு எழுந்தது. மேலும் மொய்த்ராவின் நாடாளுமன்ற இணைய கணக்கைதுபாயில் வசிக்கும் ஹிரா நந்தானிபயன்படுத்தியதும் கண்டுபிடிக்கப்பட்டது.
இது தொடர்பாக மஹுவா மொய்த்ராவிடம் மக்களவை நெறிமுறைக்குழு கடந்த மாதம் விசாரணை நடத்தியது. ஆனால் நெறிமுறைக் குழு தலைவர் தகாத கேள்விகளை எழுப்பியதாக கூறி விசாரணையில் இருந்து பாதியிலேயே வெளியேறினார் மஹுவா.
இந்நிலையில் நாடாளுமன்ற இணைய கணக்கை பகிர்ந்து கொண்டதன் மூலம் நாட்டின் பாதுகாப்புக்கு மஹுவா ஆபத்து ஏற்படுத்தியதாக நெறிமுறைக் குழுகண்டறிந்தது. மேலும் மஹுவா லஞ்சம் பெற்றதாக ஹிரா நந்தானி தாக்கல் செய்த பிரமாண பத்திரம் அடிப்படையில் மஹுவாவை பதவி நீக்கம் செய்ய பரிந்துரை செய்தது.
இதன் அடிப்படையில் மொய்த்ராவை எம்.பி. பதவியில் இருந்துநீக்குவது தொடர்பான தீர்மானம்மக்களவையில் கடந்த வெள்ளிக்கிழமை கொண்டு வரப்பட்டது. மஹுவாவுக்கு ஆதரவாக எதிர்க்கட்சி உறுப்பினர்கள் அணி திரண்டனர். எனினும் பெரும்பான்மை உறுப்பினர்களின் ஆதரவுடன் பதவி நீக்க தீர்மானம் மக்களவையில் நிறைவேறியது. இந்நிலையில் பதவி நீக்கத்துக்கு எதிராக மஹுவாமொய்த்ரா நேற்று உச்ச நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்துள்ளார்.